முக்கிய oil உற்பத்தியாளரான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என U.S.President எச்சரித்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் Oil விநியோகத்தில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற கவலை சந்தைகளில் அதிகரித்தது. இதன் தாக்கமாக வெள்ளிக்கிழமை ஆசிய வர்த்தகத்தில் Oil prices உயர்ந்தது.
முந்தைய வர்த்தக அமர்வுகளில் சில இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், உலகளவில் Oil தேவை மேம்படும் என்ற எதிர்பார்ப்பு, அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் விநியோகத் தடைகளுக்கான அச்சம் ஆகியவை விலைக்கு ஆதரவாக அமைந்தன. இதனால் crude oil தொடர்ந்து ஐந்தாவது வாரமாக லாபத்தை நோக்கி நகர்ந்தது.
மேலும், சீனாவிலிருந்து வந்த மிதமான நேர்மறையான பொருளாதார தரவுகள், சர்வதேச எரிசக்தி நிறுவனம் தனது எதிர்கால தேவை முன்னறிவிப்பை உயர்த்தியது, மற்றும் டாலரின் பலவீனம் ஆகியவை oil market -க்கு கூடுதல் ஊக்கம் அளித்தன.