பங்கு சந்தையில் ஏன் Retail Investors பெரும்பாலும் பணத்தை இழக்கிறார்கள் பார்ப்பதற்கு முன் ஒரு சிறிய கதையோடு பார்ப்போம்!
ஆரம்பம் – ஒரு சிறிய தூண்டுதல்!
அரவிந்த் மதுரையில் ஒரு IT வேலை செய்யும் பையன். மாத சம்பளம் 32,000 ரூபாய். கஷ்டப்பட்டு சேமித்தது சுமார் 1.8 லட்சம். ஒரு நாள் office lunch break-ல் அவன் நண்பன் ஒருத்தன் நான் stock market-ல 20,000 போட்டேன், 65,000 ஆகிடுச்சுன்னு சொன்னான். அந்த இரவே அவன் YouTube-ல் best share for tomorrow-ன்னு search செய்ய ஆரம்பிச்சான். சில videos பார்த்ததும் அவனுக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு…stock market-ல பணம் சம்பாதிக்குறது ரொம்ப easy-ன்னு.
முதல் நுழைவு – Easy Money என்ற நம்பிக்கை!
அடுத்த வாரமே அவன் Demat Account open செய்து, என்ன company-ன்னு கூட தெரியாத ஒரு share வாங்கினான். இரண்டு நாளில் share கொஞ்சம் மேலே போனது. அந்த நாள் அவனுக்கு தூக்கமே வரல. “நான் late-ஆ தான் வந்தேன், இன்னும் அதிகம் போடணும்”ன்னு நினைச்சான். அடுத்த மாதம் FD break செய்து மொத்த savings-யும் market-க்கு மாற்றினான். Office வேலை குறைந்தது , market-ஐ தான் அதிகம் கவனிக்க ஆரம்பிச்சான். share இன்னும் மேலே போனதும் அவனுக்கு ஒரு over confidence.
ஆனா ஒரு நாள் காலை market open ஆனதும் அந்த share திடீர்னு 12% கீழே போனது. முதலில் அரவிந்த் அதை சாதாரண correction-ன்னு என்று நினைத்தான். “Market-ல இப்படித்தான் இருக்கும், நாளைக்கு மீண்டும் மேலே போயிடும்”ன்னு நினைச்சான். ஆனால் அடுத்த நாள் மீண்டும் கீழே போனது. இன்னும் இரண்டு நாளில் share வாங்கிய price-லிருந்து 30% கீழே போயிருந்தது. இப்போது அவனுக்கு பயம் ஆரம்பிச்சது.
தவறான முடிவு – Average செய்வது!
அவன் நண்பனிடம் கேட்டான். அவன் “இப்ப தான் அந்த பங்கின் விலை குறைவாக இருக்கிறது average பண்ணு, பிறகு மேலே போகும்”ன்னு சொன்னான். Loss recover ஆகணும்னு அவன் ஆசைப்பட்டான். அதுக்காக loan app-ல 50,000 எடுத்தும் மீண்டும் அந்த share-ஐ வாங்கினான். சில நாட்கள் share கொஞ்சம் மேலே போனது. அவனுக்கு நிம்மதி வந்தது. ஆனாலும் sell பண்ணல. “நான் வாங்கின விலை வரட்டும், loss இல்லாம வெளியேறுறேன்”ன்னு காத்திருந்தான்.
ஆனால் market அவன் எதிர்ப்பார்ப்பை தரவில்லை. வாரங்கள் கடந்து share இன்னும் கீழே போனது. மூன்று மாதத்துக்குள் அவன் 1.8 லட்சம் savings 60,000 ரூபாய்க்கு கீழே குறைந்தது. தினமும் mobile open பண்ணவே அவனுக்கு பயமாயிற்று. Chart பார்க்காமல் இருக்க முடியல; பார்த்தாலே மனசு உடைந்தது.
அப்போதுதான் அவன் அந்த company பற்றி முதல்முறைய Google-ல் search செய்துருந்தான் . அந்த company-க்கு சரியான profit இல்ல, கடன் அதிகம், promoter shares pledge செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அப்போது தான் அவனுக்கு உண்மை புரிந்தது, அவன் முதலீடு செய்யவில்லை, அவன் gamble செய்திருக்கிறான் என்று.
நிஜம் – பெரும்பாலான Retail Investors கதை
அரவிந்த் மட்டும் இல்ல. பங்கு சந்தைக்கு புதுசாக வருகிற பெரும்பாலான retail investors இதே தவறுகளைதான் செய்கிறார்கள். அவர்கள் நல்ல company வாங்காமல், வேகமாக பணம் சம்பாதிக்கணும் என்று வாங்குகிறார்கள். விலை ஏறும்போது பேராசை அதிகமாகிறது, விலை இறங்கும்போது பயம் அதிகமாகிறது. Loss வந்தால் அதை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து hold-இல் வைத்திருக்கிறார்கள், profit வந்தால் சீக்கிரம் விற்றுவிடுகிறார்கள். இதுதான் அவர்களை தொடர்ந்து loss-க்கு கொண்டு செல்கிறது.
உண்மையில் stock market-ல் மக்கள் பணத்தை இழப்பதற்கு காரணம் market அல்ல. காரணம் மனித உணர்ச்சிகள்- பேராசை, பயம், அவசரம்.