இன்றைய பொருளாதாரச் சூழலில், எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிப்பதும், அதே சமயம் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இரண்டு தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய உருவானதுதான் Kotak Twin Plan. இது Kotak Fortune Maximiser (KFM) and Kotak Term Insurance ஆகிய இரண்டு திட்டங்களின் இணைப்பாகும்.
- Kotak Fortune Maximiser (KFM): உங்கள் கனவுகளுக்கான முதலீடு
இது ஒரு ‘Participating Life Insurance’ திட்டமாகும். உங்கள் பணம் காலப்போக்கில் வளர்ந்து, உங்கள் நீண்ட கால இலக்குகளை அடைய உதவுகிறது.
இதில் மூன்று வகையான options உள்ளன. உங்களின் ஓய்வுக்காலத்திற்காகவோ அல்லது குழந்தைகளின் உயர்கல்விக்காகவோ திட்டமிடுபவர்களுக்கு இது சிறந்தது.
போனஸ் வசதி: இந்தத் திட்டத்தில் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் உங்களுக்குப் பங்கு (Bonus) கிடைக்கும். இந்த Bonus நீங்கள் பணமாகப் பெறலாம் அல்லது உங்கள் பாலிசியின் மதிப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
நீண்ட கால கவரேஜ்: 85 அல்லது 100 வயது வரை நீங்கள் இதில் பாதுகாப்பைப் பெற முடியும்.
- Kotak Term Plan: குடும்பத்திற்கான கவசம்போல்
சேமிப்புத் திட்டங்கள் முதலீட்டிற்குச் சிறந்தவை என்றாலும், அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அவை வழங்கும் தொகை குடும்பத்தின் முழுத் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போகலாம். அதைச் சரிசெய்யவே ‘Term Plan’ இணைக்கப்படுகிறது.
பாலிசிதாரருக்கு ஏதேனும் நேர்ந்தால், நாமினிக்குக் கிடைக்கும் அந்தப் பெரிய தொகை குடும்பத்தின் கடன்களை அடைக்கவும், வாழ்க்கைத்தரத்தைத் தொடரவும் உதவும்.
Twin Plan (Combo) ஏன் சிறந்தது?
தனியாக ஒரு திட்டத்தை மட்டும் எடுப்பதை விட, இரண்டையும் இணைத்து எடுப்பதில் சில முக்கிய நன்மைகள் உள்ளன:
KFM மூலம் சேமிப்பும், Term Plan மூலம் பெரிய அளவிலான பாதுகாப்பும் கிடைக்கிறது.
வரிச் சலுகை: வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் நீங்கள் செலுத்தும் பிரீமியத்திற்கு வரி விலக்கு பெறலாம். மேலும், முதிர்வுத் தொகைக்கும் (Maturity Amount) வரி விலக்கு உண்டு.
இரண்டு வெவ்வேறு நிறுவனங்களைத் தேடி அலையாமல், ஒரே நிறுவனத்தின் கீழ் உங்களின் முதலீடு மற்றும் இன்சூரன்ஸை நிர்வகிக்கலாம்.
யாருக்கு இது பொருத்தமானது?
1குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் நபர்கள்.
பணத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், தன் மறைவுக்குப் பிறகும் குடும்பம் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடாது என நினைப்பவர்கள்.
குறைந்த risk கொண்ட முதலீட்டை விரும்புபவர்கள்.
Kotak Twin Plan என்பது “Wealth Creation” மற்றும் “Life Protection” ஆகிய இரண்டையும் இணைக்கும் ஒரு பாலமாகும். உங்கள் வருமானம் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு புத்திசாலித்தனமான நிதி முடிவாக இருக்கும்.