Donald Trump ஈரான் மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தியுள்ளார். இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்பதால்தான் எடுக்கப்பட்ட முடிவு. இதனால் உடனடியாக போர் ஏற்படும் அபாயம் தற்காலிகமாக குறைந்துள்ளது. இந்த அறிவிப்பின் பிறகு, உலக பங்கு சந்தைகளில் நல்ல மாற்றம் காணப்பட்டது. முன்பு இருந்த பதற்றம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால் பங்கு சந்தைகள் உயர்ந்தன.
Oil prices இந்த செய்தியால் பாதிக்கப்பட்டது. போர் ஏற்பட்டால் oil supplies குறையும் என்ற பயம் இருந்தது. ஆனால் இப்போது தாக்குதல் நிறுத்தப்பட்டதால் அந்த பயம் குறைந்து, oil prices திடீரென சரிந்தது. தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன. பொதுவாக பதற்றம் அதிகமாக இருக்கும் போது தங்கம் விலை உயரும். ஆனால் இப்போது நிலைமை சற்றே சீராக இருப்பதால் தங்கத்தின் தேவை குறைந்து, விலை சற்று குறைந்து பின்னர் மீண்டும் சற்று உயர்ந்தது.
மொத்தத்தில், இந்த 5 நாள் இடைநிறுத்தம் உலகளவில் ஒரு குறுகிய கால நிம்மதியை கொடுத்துள்ளது. ஆனால் இது நிரந்தரமான தீர்வு அல்ல. எதிர்காலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை.