

இலங்கை அரசு, Adani Green Energy நிறுவனத்துடன் செய்த 440 மில்லியன் டாலர் மதிப்பிலான மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை அடுத்து, அதானி கிரீன் எனர்ஜி பங்குகளின் விலை 6% வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த முடிவு, மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை பாதிப்பதோடு, மட்டுமல்லாமல் எரிசக்தி கொள்முதல் திட்டங்களில் முக்கிய மாற்றங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசு சர்வதேச Tender மூலம் புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் எரிசக்தி நிலைத்தன்மையை உருவாக்க உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 2025 நிதியாண்டின் 3-வது காலாண்டில், இலங்கை அரசு 2.33% அதிக வருவாயை பெற்றுள்ளதையடுத்து, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து வேகப்படுத்தும் முயற்சிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள், அதானி நிறுவனத்திற்கும் சவாலாக இருக்கலாம், அதேவேளை இலங்கை அரசின் புதிய முயற்சிகளும் நாட்டின் எரிசக்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.