
அதானி குழுமம் உட்பட ஏழு பெருநிறுவனங்கள் குறித்து சர்ச்சையை கிளப்பி, உலகின் கவனத்தை ஈர்த்த, அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுகிறது.
இந்த நிறுவனம் 10 ஊழியர்களுடன் துவங்கி, பல பில்லியன் டாலர் இழப்புகளை நிகோலா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியது. ஹிண்டன்பர்க் நிறுவனம் 2020-இல் நிகோலா நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மின்சார வாகனங்களை மாயமானதாக கூறியதன் மூலம் பிரபலமானது.
தங்கள் நிறுவனத்தின் ஏழு ஆண்டுகால பணிகள் வாயிலாக, 100க்கும் மேற்பட்டோர் மீது சிவில் மற்றும் Criminal வழக்குகளை கண்காணிப்பு அமைப்புகள் தொடர்ந்ததாக கூறிய Nathan Anderson, அவர்களில் பலர் பெரும் பணக்காரர்கள் என்றார்.
வெறும் 10 ஊழியர்களை கொண்டு, புகார்கள் வாயிலாக பல பில்லியன் டாலர் இழப்பை கம்பெனிகளுக்கு ஏற்படுத்தியது. இந்நிறுவனத்துக்கு, 1937ல் New Jersey-க்குள் பறந்த ஜெர்மனி போர் விமானம் ஹிண்டன்பர்க் நினைவாக பெயரிடப்பட்டது
கடந்த 2023ம் ஆண்டில் ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தை குறிவைத்தது ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்றதாக, தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகளும் பெரிதாக்கியதால், அதானி குழும சந்தை மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டது.
பல தாக்குதல்களையும் தொடர்ந்து மறுத்த அதானி குழுமம், மீண்டும் முன்பிருந்ததைவிட சந்தை மதிப்பை உயர்த்திக் கொண்டது. ஹிண்டன்பர்க் கலைக்கப்படும் என்ற தகவலால், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் Nathan Anderson, தனது நிறுவன இணையதளத்தில், “நாங்கள் மேற்கொண்டு வந்த திட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி திட்டத்தையும் முடித்துவிட்டோம் இதுகுறித்து பங்குச்சந்தை வாரியத்திடம் தெரிவித்துவிட்டோம் அதன்படி இன்றுதான் கடைசி நாள்” என கூறியுள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் அதை மூடுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தை மூடும் முடுவுக்கு பின்னால் எவ்வித அச்சுறுத்தலும் காரணம் இல்லை எனவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.