அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற நம்பிக்கை, அமெரிக்க டாலரின் வலுவான நிலை, மற்றும் உலக சந்தையில் oil விநியோகம் அதிகமாக இருப்பது ஆகிய காரணங்களால் oil prices குறைந்தது. இரு நாடுகளும் அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உள்ளதால் போர் அல்லது தடைகள் வரும் அபாயம் குறையும் என்பதாலும் அதே நேரத்தில் டாலர் வலுவாக இருப்பதால் foreign buyers அதிகமாகுவதாலும் தேவை குறைந்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் oil போதுமான அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியதும் விலை சரிவுக்கு காரணமானது. மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா வெனிசுலாவிலிருந்து oil வாங்க ஒப்புக்கொண்டதால், Russian oil global market-ல் அதிகமாக மிதக்கும் என்ற எதிர்பார்ப்பும் விலை குறைவுக்கு வழிவகுத்தது. இதனால் வரும் நாட்களில் oil prices-ல் பெரிய உயர்வு இல்லாமல், முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார செய்திகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் வாய்ப்பு அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.