
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக, இரு தரப்பு உறவில் சுமூக சூழல் நிலவாமல் இருந்த போதும், சீனாவின் மத்திய வங்கி, பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களில், கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்கு முன்னதாக, நம் நாட்டில் இயங்கும் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு மேற்கொண்டுள்ள அனைத்து அன்னிய முதலீட்டாளர்கள் குறித்தும், மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.
நடப்பாண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 35 இந்திய நிறுவனங்களில், சீன மத்திய வங்கி கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளது.
அதிகபட்சமாக ICICI., வங்கியில் 6,139 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக HDFC., Infosys நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறை நிறுவனமான Power grid நிறுவனத்திலும் 1,414 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் தகுதிபெறும் நிறுவன வேலைவாய்ப்பின் போது, PBOC ICICI வங்கியில் ₹15 கோடி முதலீடு செய்து இந்திய சந்தையில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இதன் விளைவாக, வங்கி இப்போது ICICI வங்கியின் 0.67% பங்குகளை வைத்துள்ளது. இது பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது, இருப்பினும் அவர்களில் 1% நிறுவனத்திற்கு மேல் இல்லை.