கஜகஸ்தானில் இருந்து Oil விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பால் செவ்வாய்க்கிழமை Oil prices குறைந்தன. கஜகஸ்தான் தனது மிகப்பெரிய Oil வயலில் உற்பத்தியை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சந்தையில் Oil கிடைப்பது அதிகரிக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே உருவானது. இதன் காரணமாக Brent மற்றும் US crude oil prices சற்று குறைந்தன. ஆனால் அதே நேரத்தில், அமெரிக்க வளைகுடா கடற்கரையை தாக்கிய கடும் குளிர்கால புயல் காரணமாக oil production பாதிக்கப்பட்டதும், பல சுத்திகரிப்பு நிலையங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதும் Oil prices மேலும் பெரிய அளவில் சரியாமல் தடுத்தது. இதனுடன், மத்திய கிழக்கில் தொடரும் அரசியல் பதற்றமும், OPEC+ நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காமல் வைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் Oil சந்தையில் தொடர்ந்து கவனிக்கப்படும் முக்கிய காரணங்களாக உள்ளன.