Mutual Fund -ல் முதலீடு செய்ய நீங்கள் பிளான் ஏதும் வைத்திருந்தால், கடந்த சில ஆண்டுகளின் அடிப்படையில், சராசரி ஆண்டு வருமானம் 10% மேல் கொடுத்த சில ஃபண்டுகளின் திட்டங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம். பெரும்பாலும், திட்டங்கள் அவற்றின் குறுகிய கால செயல்திறனின் அடிப்படையில் பட்டியலிடப்படலாம். சில நேரங்களில், ஒரு வகையைச் சேர்ந்த திட்டங்கள் பட்டியலில் அதிக லாபம் பெற்றிருக்கலாம் அதற்கு சாதகமான பங்கு முதலீடுகள், சீசன் காரணமாக இருக்கலாம். அதனால் இந்த செப்டம்பர் மாதம் ஆண்டு வருமானம் அடிப்படையில் முதலீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ள Mutual Fund -களைப் பற்றிப் பார்க்கலாம்.
இன்று அனைவரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதற்குக் காரணம், அது கவர்ச்சிகரமான வருமானத்தைத் தருகிறது. ஆனால் முதலீட்டாளர்கள் எந்த ஃபண்டில் முதலீடு செய்வது என்பது குறித்து எப்போதும் குழப்பமடைகிறார்கள். குறைந்த Risk கொண்ட நல்ல வருமானத்தைத் தரும் திறன் கொண்ட சில ஃபண்டுகள்.
செப்டம்பர் மாதம் பரிந்துரைக்கப்பட்டுள்ள டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள்!
1. Canara Robeco Bluechip Equity Fund
2. Mirae Asset Large Cap Fund
3. Parag Parikh Flexi Cap Fund
4. HDFC Flexi Cap Fund
5. Axis Midcap Fund
6. Kotak Emerging Equity Fund
7. Axis Small Cap Fund
8. SBI Small Cap Fund
9. SBI Equity Hybrid Fund
10. Mirae Asset Hybrid Equity Fund
SIP அல்லது Lumpsum இரண்டில் எது பெஸ்ட்?
ஒருவருக்கு பங்குச் சந்தையைப் பற்றிய நல்ல புரிதல் இருந்து, அதிக அளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர் Mutual Fund Lumpsum என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இப்போது ஒரு பங்கு வாங்குவதற்கும் Mutual Fund Lumpsum என்பதற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுகிறது.
Mutual Fund – களில், நீங்கள் பங்குகளைப் போலவே ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்கிறீர்கள், ஆனால் இதில் நீங்கள் ஒரு பங்கில் முதலீடு செய்யவில்லை, மாறாக வெவ்வேறு சொத்து வகுப்புகளில் முதலீடு செய்கிறீர்கள். சொத்து வகுப்புகளில் பங்கு, பத்திரங்கள், கடன், ரியல் எஸ்டேட் போன்றவை அடங்கும். ஆனால் நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றால், பங்குச் சந்தை பற்றி எந்த அறிவும் இல்லை என்றால், நீங்கள் SIP விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய அறிவுறுத்துவது அல்ல. மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் முதலீட்டு ஆலோசகரை அணுகிய பின்னரே எந்த முதலீட்டு முடிவையும் எடுக்கவும்.