SIP-ஐ பற்றி நினைக்கும் போது, உங்கள் நினைவுக்கு வருவது discipline and patience. ஆம், நீங்கள் ஒரு SIP-ஐத் தொடங்கியவுடன், முதன்மையான விஷயம் முதலீட்டில் ஒழுக்கத்தைப் பேணுவது, இரண்டாவது உங்கள் முதலீட்டு பயணத்தைத் தொந்தரவு செய்யாமல் சந்தை சுழற்சிகள் வந்து செல்வதைப் பார்க்கும் பொறுமை. புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட் கூட தனது செல்வத்திற்கு ஒழுக்கம், நேரம் மற்றும் Compounding- ஐ தான் காரணம் என்கிறார்.
SIP-களின் மாயாஜாலம் நேரம் (Time) கொடுக்கப்படும்போது மட்டுமே தெளிவாகத் தெரியும். உண்மையான profit, உண்மையான Compounding மற்றும் உண்மையான wealth creation அனைத்தும் நேரத்தைப் பொறுத்தது.
இது முக்கியமானது, ஏனெனில் சந்தைகள் மோசமான நிலைகளைச் சந்திக்கும்போது, அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் கூட பயந்து SIP-களை நிறுத்துவது பற்றி சிந்திக்கிறார்கள்.
ஆனால் சந்தைகள் நல்ல நிலையில் இருந்தாலும், காலப்போக்கில் நீங்கள் தொடர்ந்து நல்ல வருமானத்தைப் பெற்றாலும் கூட, உங்களை பிஸியாக வைத்திருக்கும் ஒரு கேள்வி…
நீங்கள் SIP-ஐ எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பது?
SIP வழியாக ஒரு முதலீட்டாளர் ஒரு நல்ல அளவு பணம் சம்பாதிக்க எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்!
ஒரு வருடம், மூன்று ஆண்டுகள், அல்லது பத்து ஆண்டுகள் என பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு SIP-ஐத் தொடங்குகிறார்கள்..ஆனால் சில வருடங்களில் தவிர்க்க முடியாமல் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்….”நான் நிறைய முதலீடு செய்துவிட்டேன் அல்லது எனக்கு நல்ல லாபம் வந்து விட்டது நான் SIP ஐ நிறுத்தலாமா?”
எனவே SIP-க்கு ஒருவர் எவ்வளவு காலத்தை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன், SIP என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
SIP முதலீட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சந்தை நேரத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் ஒரு SIP-ஐத் தொடங்கும்போது, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்கிறீர்கள் – சில நேரங்களில் குறைந்த விலையிலும், சில நேரங்களில் அதிக விலையிலும் யூனிட்களை வாங்குகிறீர்கள். சந்தை உச்சத்தின் போது அதிக விலையில் வாங்கப்பட்ட யூனிட்கள் சந்தை கீழே இருக்கும் போது வாங்கப்பட்டவற்றுடன் சராசரியாகக் கணக்கிடப்படுகின்றன. இது ரூபாய் செலவு சராசரி ( rupee cost average) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த சராசரி முழுமையாக வேலை செய்ய, முதலீடு ஒரு நீண்ட காலத்திற்குத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஈக்விட்டி SIP களில் முதலீடு செய்வது, நேர்மறையான வருமானத்தை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் மூலதன இழப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
கடந்த இருபது வருட தரவுகளில், 7+ ஆண்டு காலத்தில் எதிர்மறை வருமானம் வர வாய்ப்பு பூஜ்ஜியமாகவும், மேலும் 10% க்கும் அதிகமான CAGR வர வாய்ப்பு சுமார் 81% என்றும் தரவுகள் காட்டுகின்றன.
Short term vs Long Term SIP:
நீங்கள் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு SIP-ஐத் தொடங்கினால், உங்கள் வருமானம் பெரும்பாலும் market condition பொறுத்தது. சில நேரங்களில் நீங்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள், சில நேரங்களில் இல்லை. ஆனால் நீங்கள் 7-10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உங்கள் SIP-ஐத் தொடரும்போது, compounding விளைவு தெளிவாகத் தெரியும்.
உதாரணமாக, ஒரு நல்ல ஈக்விட்டி ஃபண்டில் ரூ. 10,000 SIP, 3 ஆண்டுகளில் சுமார் ரூ.4.49 லட்சமாக வளரக்கூடும், இது 15% CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) என்று வைத்துக் கொண்டால். அதே SIP, 5 ஆண்டுகளில் ரூ.8.73 லட்சமாக வளரக்கூடும். ரூ.10,000 SIP, முதலீடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.14.33 லட்சமாக இருக்கும்.
ஆனால் அதே SIP இன்னும் 3 ஆண்டுகளுக்கு (மொத்தம் 10 ஆண்டுகள்) தொடர்ந்தால், சுமார் ரூ.26.30 லட்சமாக இருக்கும் (சராசரியாக 15% வருமானம் என்று வைத்துக் கொண்டால்). 10 ஆண்டுகளில் உங்களது 12 லட்சம் முதலீடு இரண்டு மடங்காக சுமார் 26 லட்சமாக வளர்ந்துள்ளது.
இதன் பொருள் நேரம்தான் உண்மையான கூட்டு சக்தி – காலம் நீண்டால், வருமானம் அதிகமாகும்.
முதலீட்டாளர்கள் ஏன் SIP-களை முன்கூட்டியே நிறுத்துகிறார்கள்…
சந்தை தேக்கமடைந்துவிட்டதாகவோ அல்லது வருமானம் வரவில்லை என்றோ நினைத்து பல முதலீட்டாளர்கள் SIP-களை முன்கூட்டியே நிறுத்துகிறார்கள். உண்மையில், முதல் இரண்டு ஆண்டுகள் ஒரு நீண்ட முதலீட்டு பயணத்தின் அடித்தளம் தொடங்கும் நேரம், பின்னர் தான் compounding அதில் இடம்பிடிக்கிறது.
SIP-களை பாதியிலேயே நிறுத்துவது ஒரு மோசமான யோசனை. SIP-களின் உண்மையான வளர்ச்சியை 8-வது வருடத்திற்குப் பிறகு காணலாம், ஏனெனில் அப்போது, ஒரு உறுதியான முதலீட்டுத் தளம் கட்டமைக்கப்பட்டு, உங்களது லாபம் லாபத்தை சம்பாதிக்கும் விளைவு தெரியும்.
SIP முதலீட்டாளர்களுக்கான முக்கிய பாடங்கள்:
- 3 வருடங்களுக்கும் குறைவான SIP-கள் சந்தை நேரத்தின் அபாயத்தைக் கொண்டுள்ளன.
- 5 முதல் 7 ஆண்டுகள் வரையிலான SIP-கள் initial level compounding-ஐ வழங்குகின்றன.
- 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான SIP-கள் wealth creation-ஐ உருவாக்குவதற்கான தொடக்கத்தைக் குறிக்கின்றன.
- 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட SIP-கள் நிதி சுதந்திரத்திற்கான திறவுகோலாக இருக்கலாம்.
சுருக்கமாக…
‘நீங்கள் எவ்வளவு காலம் ஒரு SIP-யில் இருக்க வேண்டும்?’ என்பதற்கான பதில் ‘உங்கள் இலக்கை (Goal )அடையும் வரை’ என்பதுதான். நீங்கள் 10 அல்லது 15 ஆண்டு கால இலக்குடன் முதலீடு செய்தால், சந்தை ஏற்ற இறக்கங்கள் உங்களைத் பாதிக்காது. SIP-களின் மாயாஜாலம் நீண்ட காலத்தில் மட்டுமே வெளிப்படும். SIP-களுக்கு நேரம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், பொறுமை மிகப்பெரிய வெகுமதிகளைத் உங்களுக்கு தரும்.