இன்று இந்தியாவில் பலரும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் மட்டும் முதலீட்டாளர்கள் கவனிக்க தவறுவது ஒரு share-இல் முதலீடு செய்வது முன் அதை எவ்வாறு Analyse செய்வது என்று!
அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis) என்றால் என்ன ?
Fundamental Analysis என்பது ஒரு share price-ஐ பார்க்கும் முறை அல்ல; அது ஒரு company-யின் உண்மையான மதிப்பை (real value) புரிந்துகொள்ளும் முறை. சந்தையில் ஒரு share-இன் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கும். இன்று உயர்ந்தாலும் நாளை குறையலாம். ஆனால் ஒரு நல்ல business ஒரு நாளில் உருவாகாது. அது வருடங்கள் எடுத்தே வளர்கிறது. அதனால் ஒரு முதலீட்டாளர் குறுகிய கால (Short-term) movements-ஐ விட நீண்ட கால long-term business strength-ஐ கவனிக்க வேண்டும்.
ஒரு எளிய வாழ்க்கை உதாரணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவர் ஒரு grocery shop-ஐ வாங்க திட்டமிடுகிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த கடையின் உரிமையாளர் “இந்த கடை மிகவும் நல்லது, உடனே advance கொடுங்கள்” என்று கூறினாலும், அவர் உடனடியாக பணம் வழங்க மாட்டார். முதலில் சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ள முயல்வார். அந்த கடைக்கு தினமும் எத்தனை வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், மாத வருமானம் எவ்வளவு, செலவுகள் என்ன, கடன் இருக்கிறதா, அருகில் புதிய supermarket திறக்கும் வாய்ப்பு உள்ளதா போன்ற விஷயங்களை அவர் கேட்டு தெரிந்து கொள்வார். இந்த தகவல்களை அறியாமல் அவர் அந்த business-ஐ வாங்க முடிவு செய்யமாட்டார்.
அதே logic தான் share market-லும் பொருந்தும். Share வாங்குவது என்றால் ஒரு business-ஐ சிறிய அளவில் வாங்குவது. அந்த business நல்லதா கெட்டதா என்பதை ஆராய்வதே Fundamental Analysis.
Fundamental Analysis செய்யும்போது முதலீட்டாளர் முதலில் company-ன் வருமானத்தை (sales) கவனிப்பார். ஒரு company வருடம் வருடம் அதிகமாக பொருட்கள் விற்பனை செய்கிறதா என்றால் அந்த business-க்கு demand இருக்கிறது என்று அர்த்தம். அதன் பிறகு profit பார்க்கப்படுகிறது. Sales அதிகமாக இருந்தாலும் லாபம் இல்லையெனில் அந்த business பலவீனமானது. தொடர்ந்து லாபம் ஈட்டும் company-கள் பொதுவாக நிலையானவை என்று கருதப்படுகின்றன. அடுத்து debt கவனிக்கப்படுகிறது. கடன் என்பது ஒரு business-க்கு இரட்டை ஆயுதம் போல. சரியாக பயன்படுத்தினால் வளர்ச்சி தரும்; அதிகமாக இருந்தால் ஆபத்து தரும். அதிக வட்டி செலுத்த வேண்டியதால் company-ன் earnings குறையலாம். அதனால் முதலீட்டாளர்கள் குறைந்த கடன் கொண்ட company-களை பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.
Fundamental Analysis-ன் முக்கிய நோக்கம் share-ன் “உண்மையான மதிப்பு” (intrinsic value) கண்டுபிடிப்பது. சந்தை ஒரு share-ஐ சில நேரங்களில் அதிக விலையில் விற்கலாம்; சில நேரங்களில் குறைவாக மதிப்பிடலாம். ஒரு முதலீட்டாளர் இந்த வேறுபாட்டை பயன்படுத்த முயற்சிப்பார். சந்தை விலையை விட குறைவாக கிடைக்கும் நல்ல business-ஐ வாங்குவது தான் புத்திசாலித்தனமான முதலீடு என்று கருதப்படுகிறது.
பலர் share market-ல் தோல்வியடைவதற்கான காரணம் market volatility அல்ல; அவர்கள் வாங்கும் company-ஐ புரிந்துகொள்ளாதது. ஆனால் ஒரு company-ன் business model, நிதி பலம் (financial strength), வளர்ச்சி திறன் (growth potential) ஆகியவற்றை புரிந்து கொண்டு வாங்குவது முதலீடாகும்.
அடிப்படை பகுப்பாய்வு நமக்கு ஒரு முக்கியமான மனநிலையை கற்றுத்தருகிறது.
நாம் பங்குகளின் விலையை துரத்தாமல் அவற்றின் மதிப்பை தேட வேண்டும்.