
இந்த மாதத்தின் முதல் மூன்று நாட்களில், நாட்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் மற்றும் உள்நாட்டு சந்தை மதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் இருந்து, 4,285 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடந்த டிசம்பரில் அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இம்மாதத்தின் முதல் மூன்று வர்த்தக அமர்வுகளில், 4,285 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்களின் போக்கு எச்சரிக்கையான அணுகுமுறையையே குறிக்கிறது. இவர்கள் கடந்தாண்டில் இந்திய பங்குகள் மீதான முதலீடுகளை கணிசமாக குறைத்துள்ளனர். நிகர வரவு, வெறும் 427 கோடி ரூபாயாக உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி FPI களின் உணர்வை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது, ஏனெனில் நாணய ஆபத்து இந்திய முதலீடுகளை Attractive-வாகா ஆக்கியுள்ளது. இது தவிர, இந்த ஆண்டு வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவுகளின் கணிப்புகளின் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துள்ளன என்றே கூறலாம்.
Morningstar Investment Research இந்தியாவின் Associate மேனேஜிங் Director Research Himanshu Srivastava கூறுகையில், நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு பங்குகளை Safe zone இல் விற்பனை செய்துள்ளனர். இது தவிர, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சாத்தியமான கொள்கைகள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் அவரது முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிக எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.