ஹெல்த் இன்சூரன்ஸ் என்று சொன்னாலே…நான் நல்லாதானே இருக்கேன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே…நான் ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கணும்? என்ற பதில் பலரிடம் உள்ளது.
ஆனால், எதிர்பாராத சமயத்தில் நமக்கு ஒரு விபத்தோ, உடல்நலக்குறைவோ நேரிடும்போது மருத்துவ செலவுக்காக பெரிய தொகை தேவைப்படும். அப்போது நம்மால் என்ன செய்ய முடியும்? நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ உதவி கேட்க முடியும். அவர்களால் கொடுக்க முடிந்த தொகை என்றால் சரி. அவர்களால் உதவ முடியாத தொகை என்றால், உங்களுடைய மருத்துவ செலவுகளை எப்படி சரி செய்வீர்கள்? அந்த நேரத்தில் உங்களுடைய குடும்ப செலவுகளை எப்படி பேலன்ஸ் செய்வீர்கள்? அப்பொழுது உங்களுக்கு உதவப் போவது எது? ஹெல்த் இன்சூரன்ஸ் தான்.
நான் மாத சம்பளம் வாங்குபவன், ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க அதிகம் செலவு செய்ய வேண்டுமா? என்றால் அதுவும் இல்லை. ஒருவரின் வயதிற்கு ஏற்ப அவருடைய காப்பீடு கட்டணiத் தொகை வேறுபடும்.
உதாரணமாக, 30 வயதுள்ள ஒருவர் தன் குடும்பத்திற்கு (இரு பெரியவர்கள், ஒரு சிறியவர்) 5 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையில் இருக்கும்.
எதிர்பாராத விதமாக உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கோ ஏதேனும் விபத்து அல்லது உடல்நலக் குறைவு நேரிடும் நேரத்தில் உங்களால் மருத்துவச் செலவுக்காக 5 லட்சம் வரை கிளைம் செய்ய முடியும். நீங்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிப்பு அடைவதை சரி செய்ய முடியும்.
ஒரு வருடம் முடிவில் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் என்றால், அடுத்த வருடம் அந்த பிரீமியம் தொகையை செலுத்தி renewal செய்யும் போது, நமது க்ளைம் தொகை இரட்டிப்பாக மாறும். உதாரணமாக, ஒரு நபர் 5 லட்சத்துக்கு பாலிசி பெற்றிருந்தால், இரண்டாம் வருடத்தில் 10 லட்சமாக மாறும் ஆனால் நாம் கட்டும் பிரீமியம் தொகை மாறாது.
மேலும், உங்கள் உடல் நலத்திற்காக எடுக்கும் மருத்துவக் காப்பீடுக்கு, நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு அரசு வருமான வரிச் சலுகையை பெற வழி செய்கிறது. மருத்துவக் காப்பீடு பாலிசிக்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு ’80-D’ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. ஒரு நிதியாண்டில் நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகையில் ரூபாய் 25 ஆயிரம் வரை வரிச் சலுகையாக பெற முடியும்.