நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் MUTUAL FUND- முதலீடு செய்வதன்மூலம் வரிவிலக்கு பெறமுடியும் என்பது. வரி விலக்கு பெற நிறையவழிகள் உள்ளது. அதில் முக்கியமான, நமக்கு அதிக லாபம் தரக்கூடியது இந்த ELSS FUND.
Equity Linked Saving Scheme (ELSS) என்பது ஒரு திறந்தநிலை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும், இது முதன்மையாக ஈக்விட்டிகள் மற்றும் ஈக்விட்டி தொடர்பான தயாரிப்புகளில் முதலீடு செய்கிறது. வருமான வரிச் சட்டம், பிரிவு ’80C’ இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதிபெறும் நிதிகளில் இது ஒரு சிறப்பு வகையாகும்.
பிரிவு ’80C’ இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதிப்பெறுபவை LIFE INSURANCE, SCHOOL FEES, HOUSEING LOAN PRINCIPAL AMOUNT, EDUCATION LOAN PRINCIPAL AMOUNT, PROVIDEND FUND மற்றும் MUTUAL FUND. இதில் நமக்கு லாபம் தரக்கூடியது லைப் இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே.
மியூச்சுவல் ஃபண்டில் ELSS FUND மட்டுமே ’80C’ இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதிபெறும். இது ஒரு Savings Scheme ஆகும். இந்த Scheme-ல் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் தொகையில் ஒரு லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். இதன் மூலமாக நாம் 45,000 வரை வரைசேமிக்கலாம். இதில் முதலீடு செய்யும் தொகையை குறைந்தபட்சம் 3 வருடங்கள் எடுக்கமுடியாது. மேலும் தொடர்வது என்றாலும் தொடரலாம். இதில் 8-10% வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.