NCDEX – National Commodity and Derivatives Exchange என்பது மதிப்பு (value) மற்றும் ஒப்பந்தங்களின் (Contract) எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள சிறந்த சரக்கு பரிமாற்றங்களில் ஒன்றாகும். இது MCX – Multi Commodity Exchange – க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. NCDEX – 2003-ல் நிறுவப்பட்டது மற்றும் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.
NCDEX – இந்திய விவசாய பொருட்களின் சந்தையாகும். இந்தியாவின் வளர்ந்து வரும் விவசாயத்துறையில் NCDEX முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு பொருட்களின் எதிர்கால ஒப்பந்தங்களில் வர்த்தகம் (Future Trading) செய்வதற்கான மின்னணு வர்த்தக தளத்தை (online Trading) NCDEX வழங்குகிறது. NCDEX -ல் வர்த்தகம் செய்யப்படும் சில பொருட்களில் பருத்தி விதை எண்ணெய் கேக் (Cocukadl), ஆமணக்கு விதை (Castor seed), சீரகம் (Jeera), காட்டன் (Kapas), கொத்தவரங்காய் விதை (Guarseed), மஞ்சள் (Turmeric), கொத்தமல்லி (Dhaniya), இசப்கோல் விதை (Isabgol seed) போன்ற விவசாய பொருட்கள் அடங்கும்.
NCDEX ஆனது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இயங்குகிறது மற்றும் இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் Futures மட்டுமின்றி Options, positional Trading – ம் வழங்குகிறது. NCDEX காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது. Market value- export, import, Market Changes இவற்றை பொருத்து மாறுபடும்.
Multi Commodity Exchange (MCX) -உடன் ஒப்பிடும் போது NCDEX-க்கான Margin Amount சற்று அதிகமே! இருப்பினும் NCDEX Market பற்றிய முழுமையான புரிதலுடன் Trading-ல் இறங்கும் போது மிகுந்த இலாபம் ஈட்ட வழிவகுக்கும். NCDEX – பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), போலவே செயல்படுகிறது. NCDEX -லும் குறைவான முதலீட்டில் Trading செய்வதற்கான Stocks -ம் உள்ளது. NCDEX Market -ல் Trading செய்ய ஆரம்பிக்கும் போது முதலீடு குறைவான Stocks – ல் இருந்து ஆரம்பிப்பது சிறந்தது.