AMFI தரவுகளின்படி, செப்டெம்பர் 30 தேதி நிலவரப்படி Balanced Advantage Fund-களின் (BAFs) நிகர AUM ரூ. 2.14 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஜூலை 2023 முதல் அதிகரித்து வருகிறது. ஏனெனில் முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்தைத் தேடுகிறார்கள்.
Equity மற்றும் Debt கலவையில் முதலீடு செய்வதன் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் நுழையும் போது அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத புதிய முதலீட்டாளர்களுக்கான பிரபலமான தேர்வாக BAF-கள் உருவாகியுள்ளன.
முதல் முறையாக முதலீடு செய்ய விரும்பும் செய்யவிரும்பும் முதலீட்டாளர்கள் BAF-களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை.
1. Hybrid Funds:
Dynamic Asset Allocation Funds என்று அழைக்கப்படும் பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டுகள், பங்கு மற்றும் கடன் கருவிகளின் கலவையில் முதலீடு செய்யும் ஒருவகை திட்டமாகும். இது முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கத்தை திறம்பட வழிநடத்த உதவுகிறது. இதில், பெரும்பாலான Asset Allocation வேலைகள் AMC நிறுவனத்தால் செய்யப்படுகிறது.
2. நன்மைகள்:
சந்தை ஏற்ற இறக்கத்தின் காலங்களில், பல முதலீட்டாளர்கள் தங்கள் நிதிகளில் சிலவற்றை ஈக்விட்டி திட்டங்களில் இருந்து BAF-களுக்கு மாற்ற முனைகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, சந்தை சுழற்சிகளின்படி சொத்து ஒதுக்கீட்டை நிர்வகிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை இவை தருகின்றன.
3. நிலையான வருமானம்:
மேலே பார்த்தபடி, BAF-கள் நிலையான வருமானத்தை அளித்து, கலப்பின முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களிடையே பிரபலமாக உள்ளன. BAF-கள் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் திறன் கொண்டவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
4. நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமா?
முதல் முறை முதலீட்டாளர்களுக்கு BAF-கள் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஏனெனில் சொத்து ஒதுக்கீடு தானாகவே நிர்வகிக்கப்படுகிறது. தற்போது, சொத்து ஒதுக்கீடு உத்திகள் ஏற்ற, இறக்கம் மற்றும் சந்தைச் சுழற்சிகளுக்கு உகந்ததாக இருப்பதை உறுதிசெய்ய, BAF-களில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம் என்பது நிபுணர்களின் கருத்து.
5. 5-10 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படும் BAF-கள்:
அக்டோபர் 16, 2023 வரையிலான AMFI இணையதளத் தரவுகளின்படி, 10 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படும் 5 BAF-கள் பின்வருமாறு:
S. No | Fund Name | Direct Plan | Regular Plan |
1. | HDFC Balanced Advantage Fund | 17.66% | 16.75% |
2. | ICICI Prudential Balanced Advantage Fund | 13.44% | 12.40% |
3. | Nippon India Balanced Advantage Fund | 13.25% | 12.13% |
4. | Edelweiss Balanced Advantage Fund | 12.88% | 11.69% |
5. | Aditya Birla Sun Life Balanced Advantage Fund | 12.67% | 11.56% |