ஜனவரி 2020 முதல் ஜூன் 2023-க்கு இடையில், நாட்டில் பதிவான அனைத்து இணையக் குற்றங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிதி மோசடிகள் நடந்துள்ளதாக ஐஐடி-கான்பூர் ஆய்வு காட்டுகிறது. இந்த நிதி மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பேங்கிங் மற்றும் UPI பேமெண்ட்கள் தொடர்பானவை. தற்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Aadhar- enabled Payment System- இல் (AePS) உள்ள பிழையைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மக்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த வகையான மோசடியின் பயங்கரமான பகுதி என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு OTP அல்லது link அல்லது அஞ்சல் போன்ற எந்தத் தகவலும் கிடைக்காது. ஆதார் அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட பயோமெட்ரிக் விவரங்களை அணுகுவதன் மூலம் குற்றவாளிகள் உங்கள் பணத்தை திருடலாம். மோசடி செய்பவர்கள் கைரேகை விவரங்களைப் பிடித்து, அதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் வங்கியின் பெயர் மற்றும் கணக்கு விவரங்களைப் பெறுவார்கள். மிக மோசமான விஷயம் என்னவென்றால், AePS மோசடியில் பாதிக்கப்படுபவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் டெபிட் செய்யப்படும் போது ஒரு SMS கூட வருவதில்லை.
ஹோட்டல்கள், Xerox கடைகள் மற்றும் உள்ளூர் Internet centre-கள் போன்ற இடங்களில் மக்கள் தங்களின் ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்கும் இடங்களாக இருப்பதால்,மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இங்குதான் தங்களின் இலக்குகளை தேடுகின்றனர். ஆதார் விவரங்கள் கிடைத்தவுடன் தங்கள் இலக்குகளின் வங்கிக் கணக்குகளின் விவரங்களைப் பெற அடிக்கடி பின்தொடர்கின்றனர். இந்த மோசடியின் மிக முக்கியமான அம்சம் கைரேகை விவரங்கள். பதிவேடு அலுவலகங்கள் போன்ற அரசு அலுவலகங்களில் குற்றவாளிகள் கைரேகை விவரங்களைத் தேடுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. கைரேகைகளை எடுக்க சிலிக்கான் கட்டைவிரல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் அவர்கள் AePS-ஐப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கின்றனர்.
இந்த மோசடியில் இருந்து உங்கள் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை பாதுகாப்பது எப்படி?
1. AePS மோசடியில் இருந்து உங்களைக் காப்பாற்ற, ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் Lock செய்வது அவசியம்.
2. UIDAI தளம் அல்லது mAadhaar மொபைல் செயலியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். அனைத்து ஆதார் வைத்திருப்பவர்களுக்கும் AePS- ஆனது எப்போதும் enable-ஆக இருக்கும். எனவே, பயனர்கள் இதைக் கவனத்தில் எடுத்து, தங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க Disable செய்வது அவசியம்.
3. பயோமெட்ரிக் விவரங்களைப் Lock செய்யவும், AePS அமைப்பை முடக்கவும், உங்கள் ஸ்மார்ட்போனில் mAadhaar App-ஐ பதிவிறக்கம் செய்து, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
4. நீங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், பின்னர் பயோமெட்ரிக் தரவை Lock செய்வதற்கான Option- ஐ பெறுவீர்கள்.
5. எதிர்காலத்தில் இந்த தரவைத் திறக்க எப்போதும் ஒரு Option உள்ளது. மேலும் இந்த App மூலம் உங்கள் ஆதார் எண்ணையும் Lock செய்யலாம். இது தனிநபர்கள் உங்களது ஆதார் எண் மற்றும் OTP-ஐ ஆன்லைன் சேவைகளுக்குப் பதிவு செய்ய பயன்படுத்த முடியாது என்பதை உறுதிசெய்கிறது.