Open-ended Equity Mutual Funds-ன் நிகர வரவு ஜனவரி மாதத்தில் டிசம்பரை விட 28% உயர்ந்துள்ளது. அதாவது SIP முதலீடுகள் முதன்முறையாக ரூ. 18,000-கோடியைத் தாண்டி, இதுவரை இல்லாத அளவு ரூ.18,838.33 கோடியை எட்டியுள்ளது.
ஈக்விட்டி ஃபண்டுகள் ஜனவரியில் 21,781 கோடி ரூபாய் நிகர வரவைக் கண்டுள்ளன. இது டிசம்பரில் 16,997 கோடி ரூபாயாக இருந்தது. இதில் Small-Cap Funds ரூ.3,256.98 கோடியும், Thematic ஃபண்டுகளில் ரூ.4,804.69 கோடியும், Multi-Cap Funds ரூ.3,038.67 கோடியும் நிகர வரவை பெற்றுள்ளன.
டிசம்பரில் ரூ.88.3 கோடியாக இருந்த Gold ETF நிதிகளில் நிகரப் புழக்கங்களின் அளவு, ஜனவரியில் ரூ.657.4 கோடியாக உயர்ந்துள்ளது.
வலுவான முதலீடுகளின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் டிசம்பர் இறுதியில் ரூ. 50.78 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஜனவரி இறுதியில் ரூ.52.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.