இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதாலும், கடன் வளர்ச்சி வலுவாக இருப்பதாலும், பணப்புழக்கம் இறுக்கமாக இருப்பதாலும், அதிக பணத்தை ஈர்ப்பதற்காக வங்கிகள் குறுகிய கால நிலையான வைப்பு விகிதங்களை மேலும் அதிகரிக்கலாம். இந்த குறுகிய கால நிலையான வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் நீண்ட காலவைப்பு தொகையோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
200 முதல் 300 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான விகிதங்களை பல கடன் வழங்குநர்கள் உயர்த்துவதால், வங்கிகள் தங்கள் கடன் வளர்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்ய சில்லறை வைப்புத் தொகையைத் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
மேலும் பயனர்கள் தங்கள் மொத்த பணத்தையும் ஒரே வங்கியின் FD-ல் போடாமல், மாறுபட்ட குறுகிய காலக் காலத்துடன் பல FD- களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி சுமை இல்லாமலும், காலப்போக்கில் வருமானத்தை அதிகரிக்கவும் இது ஒரு நல்ல உத்தியாக இருக்கும்.
ஒரு சில வங்கிகளில், ஒரு வருட வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி விகிதங்களை விட அதிகமாக இருப்பதை வைப்பாளர்கள் கவனிக்க வேண்டும். டெபாசிட்டர்கள் தங்கள் குறுகிய கால முதலீடுகளுக்கு குறுகிய கால வங்கி FD-களை தேர்ந்தெடுக்கலாம். அத்தகைய FD-களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் மிகவும் லாபகாரமானதாக இருக்கும்.
வங்கிகள் FD- களுக்கு வழங்கும் 5-7% வட்டி விகிதத்தையும், சேமிப்புக் கணக்குக்கு வழங்கும் வட்டி விகிதத்தையும் வைப்பாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் இது சிறந்த முதலீடாக இருக்கும்.