
பலருக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.கடைசி நிமிடத்தில் இன்சூரன்ஸ் இல் முதலீடு செய்து காப்பீட்டுத் தேவைகளைக் குறைத்து மதிப்பீடு செய்து தவறாக புரிந்து கொள்கின்றனர். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்க்காகவும் நீங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை டேர்ம் இன்சூரன்ஸ்க்கு ஒதுக்க வேண்டும்.
எனவே, வரிகளில் பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவோ அல்லது குறைந்த பிரீமியத்தைச் செலுத்துவதற்காகவோ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்காமல் எந்தவொரு டேர்ம் திட்டத்தையும் வாங்காதீர்கள். ஒரு Term Insurance- ஐ தேர்ந்தெடுக்கும் போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணிகள் இவை.
1. எப்போது வாங்குவது:
திருமணமானவர்களுக்கு மட்டுமே காப்பீடு அவசியம் என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது. உண்மையில், காப்பீடு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமாகிறது. ஒரு குடும்ப உறுப்பினர் சேர்க்கப்படும்போது அல்லது வீட்டுக் கடன் போன்ற பெரிய கடன் எடுக்கப்படும்போது கவரேஜை அதிகரிக்க வேண்டும்.
2. தேவையான அளவு:
பொதுவாக, ஒரு ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை தேர்வு செய்யும் போது அதன் தொகையானது வருமானத்தை விட குறைந்தபட்சம் பத்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
3. ஒரு திட்டம் போதுமா?
ஒரு குடும்பத்திற்கு ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியே போதுமானது. மேலும் குடும்ப தேவைகளும் குடும்ப உறுப்பினர்களும் அதிகமாகமாகும் பொது அதற்கு ஏற்றார் போல் பாலிசியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
4. செலுத்தும் காலம்:
அதிக பிரீமியங்கள் நீண்ட காலத்துடன் ஒத்திருக்கும், அதே நேரத்தில் அதற்க்கு நேர்மாறாகவும் இருக்கலாம். காப்பீட்டு தொகையை முன்கூட்டியே செலுத்தி விட்டால் அது நீண்ட காலத்திற்கு செல்லாமல் ஓய்வு பெறும் நேரத்தில் உதவியாக இருக்கும்.
5. திட்ட வகை:
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருவரால் அவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்து தேவையான மாற்றங்களைச் செய்ய முடியாவிட்டால், குறைந்த விலை பிரீமியத்துடன் கூடிய பாலிசி வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.
6. Online or Offline:
டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் ஆன்லைன் விலை ஆஃப்லைன் விலையை விட குறைவான விலையாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்சூரன்ஸ் பற்றி சரியான knowledge இல்லையென்றால் ஆஃப்லைனில் எடுப்பது சிறந்தது. ஏனெனில் அங்கு, அதில் அனுபவம் உள்ள நபர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
7. எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது?
அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI), மேற்பார்வையிடுகிறது. ஒரு காப்பீட்டாளர் நிதி மற்றும் கடன் செலுத்தும் அளவை கண்காணிக்கிறது. எனவே இந்த துறையில் அனுபவம் உள்ள, அதிக Claim Settlement தருகின்ற நிறுவனத்தை தேர்வு செய்வது நல்லது.
8. படிவம் நிரப்புதல்:
காப்பீட்டு முகவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் . பாலிசியை அண்டர்ரைட் செய்வதற்கு முன் காப்பீட்டு நிறுவனத்திற்கு என்ன தகவல் தேவை என்பதை இது தெரியப்படுத்துகிறது. கடந்தகால மருத்துவ வரலாறு, தற்போதைய மருந்துகள், தற்போதைய நோய்கள், புகைபிடிக்கும் பழக்கம் போன்ற அனைத்து தொடர்புடைய தகவல்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
9. ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்களைக் கவனியுங்கள்:
இந்தியாவில் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளுடன் கிடைக்கும் கூடுதல் ரைடர்கள் அல்லது ஆட்-ஆன்களை ஆராயுங்கள். தீவிர நோய்க்கான பாதுகாப்பு, விபத்து மரண பலன் அல்லது இயலாமை ஏற்பட்டால் பிரீமியம் தள்ளுபடி போன்ற ரைடர்கள் உங்கள் கவரேஜை அதிகரிக்கலாம். உங்கள் குறிப்பிட்ட தேவைகளை மதிப்பீடு செய்து, விரிவான பாதுகாப்பிற்காக தொடர்புடைய ரைடர்களைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இருப்பினும், இந்த ரைடர்களின் செலவு-செயல்திறனைத் தேர்வுசெய்யும் முன் அவர்களின் நன்மைகளுக்கு எதிராக மதிப்பீடு செய்யவும்.
10. தெரிந்து கொள்ள வேண்டியவை:
பாலிசி நியமனப் படிவத்தை நிரப்புவதைத் தள்ளி வைக்கக் கூடாது. கூடுதலாக, பாலிசி ஆவணங்கள் எங்கு சேமிக்கப்பட்டுள்ளன என்பதையும், காப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை நாமினிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.