Fixed Deposit நம்முடைய நிதி எதிர்காலத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் ஒரு Fixed Deposit-ஐ தேர்வு செய்யும் முன்பு அதன் நிறை குறைகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு அதன் பின் அதில் சேமிப்பை தொடங்க வேண்டும். இந்த சேமிப்பை Long Term ஆகவோ அல்லது Short Term ஆகவோ நம் விருப்பம் போல் தொடரலாம். Short Term Fixed Deposit பற்றி இங்கு பாப்போம்.
Short Term Fixed Deposit குறுகிய காலத்திற்கு சேமிப்பை தக்க வைத்து கொடுக்கிறது.
Short Term Fixed Deposit-ன் நிறைகள்:
- குறுகிய கால FD-களின் பலன் பணம் தேவை படும் போது உடனடியாக எடுத்து கொள்ள முடியும். குறுகிய லாக்-இன் (Lock-In) காலம் என்பதால் , அதிக அபராதங்களை எதிர்கொள்ளாமல் தேவைப்பட்டால் முன்கூட்டியே பணத்தை திரும்ப எடுத்து கொள்ள முடியும்.
- மூலதனத்தைப் பாதுகாக்கும் போது சிறிது வருமானத்தைப் பெறலாம். பணத்தைச் சேமிக்க பாதுகாப்பான இடத்தைத் தேடும் எவருக்கும் Short Term Fixed Deposit சிறப்பாக அமையும்.
- குறுகிய கால FD-கள் நெகிழ்வான முதலீட்டு தேர்வுகளை வழங்குகிறது. FD முதிர்ச்சியடையும் போது, நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, அதை புதுப்பிக்க அல்லது மாற்று முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய முடியும்.
Short Term Fixed Deposit-ன் குறைகள்:
- வட்டி விகிதங்கள் என்று வரும்போது, குறுகிய கால நிதி வைப்புகளுக்கு பொதுவாக நீண்ட காலத்தை விட குறைவான விகிதங்கள் இருக்கும். வருமானம் நிலையானதாக இருந்தாலும், பணவீக்கத்தைத் தாண்ட முடியாமல் போகலாம், இது இறுதியில் வாங்கும் திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.
- குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக குறுகிய கால FD-களின் வளர்ச்சி திறன் குறைவாக உள்ளது. முதலீட்டாளர்கள் லாபகரமான தொகையை எதிர்பார்த்தால் அதற்கு குறுகிய கால FD பொருத்தமானதாக இருக்காது.
- விரைவான முதிர்வு காரணமாக, குறிப்பாக முதிர்வுக்குப் பிறகு வட்டி விகிதங்கள் குறைந்தால், குறுகிய கால நிலையான வைப்புகளில் மறு முதலீட்டு ஆபத்து உள்ளது. மேலும் மீண்டும் முதலீடு செய்யும்போது, குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை ஏற்க வேண்டியிருக்கும்.