ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி Classic, Silver, Global மற்றும் Contactless உள்ளிட்ட பல்வேறு வகை எஸ்பிஐ டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்களை மாற்றி உள்ளது. இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என SBI கூறியுள்ளது.
யுவா, கோல்ட், காம்போ மற்றும் பிளாட்டினம் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு எஸ்பிஐ டெபிட் கார்டு வகைகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது.
SBI டெபிட் கார்டு வைத்திருப்பவரின் திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:
- கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட்லெஸ் வகைகளின் கட்டணங்கள் ரூ.125+GST-ல் இருந்து ரூ.200+GST-யாக உயர்த்தப்பட்டுள்ளது.
- யுவா, தங்கம், காம்போ டெபிட் கார்டு, மை கார்டு வகைகளின் கட்டணம் ரூ.175+GST-ல் இருந்து ரூ.250+GST-யாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பிளாட்டினம் டெபிட் கார்டின் கட்டணம் ரூ.250+GST-ல் இருந்து ரூ.325+GST-யாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பிரைட் பிரீமியம் வணிக டெபிட் கார்டின் கட்டணம் ரூ.350+ ஜிஎஸ்டியில் இருந்து ரூ.425+ ஜிஎஸ்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல், குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதில் குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளை வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகளைப் பெற முடியாமல் நிறுத்திவைப்பதும் அடங்கும்.
டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான பிற சேவைகளில் வழங்கல் கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களில் திருத்தம் செய்வதையும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. வங்கி அறிவிப்பின்படி, SBI கணக்கு வைத்திருப்பவர்கள் பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ. 300 செலுத்த வேண்டும், இருப்பினும், கிளாசிக், சில்வர், கோல்ட் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளை வழங்குவதற்கு கட்டணம் ஏதுமில்லை.