எந்த ஒரு விஷயத்தையும் ஒரே நாளில் முடித்து விட முடியுமா? என்று கேட்டால் சற்று கடினம் தான். அதற்கு தினமும் சிறு முயற்சியை செய்ய வேண்டும். இதே போன்று தான் முதலீடும் தினமும் ஒரு சிறு தொகையை சேமித்தால் நீண்ட காலத்தில் பெரிய தொகையை பெற முடியும். பெரிய தொகையை உருவாக்கிய முதலீட்டாளர்களை பார்த்தோமானால் கண்டிப்பாக அவர்கள் ஒரு சிறிய முதலீட்டில் தான் தொடங்கி இருப்பார்கள்.
ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமிப்பதன் மூலமும், கூட்டு வட்டியை வழங்கும் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமும் 1 கோடி ரூபாய்க்கு மேல் கார்பஸை உருவாக்க முடியும். இதை நம்புவதற்கு உங்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கும்.
எந்த முதலீடானாலும் சரி முன்கூட்டியே தொடங்குவது அபரிமிதமான லாபத்தை வழங்கும். அதுவும் கூட்டு வட்டி திட்டங்களில் முதலீடு செய்யும்போது அற்புதங்களை பெற முன்கூட்டியே தொடங்குவது நல்ல வருமானத்தை பெற்று தரும். நீங்கள் தினமும் ரூ.50 சேமித்து ரூ.1 கோடி உருவாக்க வேண்டும் என்றால், முடிந்தவரை விரைவில் முதலீடு செய்ய தொடங்குங்கள். ஒரு நாளைக்கு ரூ.50 சேமித்தால், மாதத்திற்கு ரூ.1500 ரூபாய், அப்படியானால் ஒரு வருடத்திற்கு 18,000 ரூபாய் , 25 வருடங்களுக்கு பிறகு 1,00,00,000
முதலீட்டை பழக்கமாக்கிக் கொள்ள, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கிலிருந்து பிடித்துக் கொள்ளும்படி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம்.