நமது இந்திய குடும்பங்களில் மொத்த வருமானத்தில் 75% திருமணம் மற்றும் கல்விக்கு அடுத்தபடியாக மருத்துவத்திற்கு செலவழிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் 74 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் நீரிழிவு Type 2 வகை நோய் உள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் நீரிழிவு நோய் 79.4 மில்லியன் நபர்களை பாதிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனா (42.3 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (30.3 மில்லியன்) ஆகிய நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 2045 ஆம் ஆண்டில் 124 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புள்ளி விவரங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. நம்முடைய வாழ்வியல் மாற்றங்களும், உணவுப்பழக்க வழக்கங்களும் நீரிழிவு நோய்க்கான வாசற்கதவை திறந்து வைத்திருப்பது போல் உள்ளது. இந்த நோயை தடுப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் நாம் மேற்கொண்டிருந்தாலும் 40 வயதிற்குமேல் எப்போது வேண்டுமானாலும் வந்தே தீரும் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். நீரிழிவு வரக்கூடிய வயதை வேண்டுமானால் தள்ளி போடலாம்.
மாதம் 5000 ரூபாய் வரை நீரழிவு நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மருந்து மாத்திரைகளுக்கான செலவு மட்டும் ஆகிறது. அது மட்டுமில்லாமல் வருடத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனைகான செலவு உட்பட வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவு ஆகிறது.
இந்த செலவுகளை ஸ்மார்ட்-ஆ எதிர்கொள்வதற்கான வழிதான் மருத்துவ காப்பீடு. ஏற்கனவே பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பல நல்ல மருத்துவ காப்பீடு திட்டங்கள் உள்ளன. பல மருத்துவ செலவுகளிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கு இன்றே திட்டமிடுங்கள்.