மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு என்பது உங்க பணத்தை வேகமாக இரட்டிப்பாக்கும் ஒரு வழி, பங்குச்சந்தையில் நேரடியாக இறங்கி முதலீடு செய்ய தயங்கும் அனைவருக்கும் சரியான முதலீட்டு தளம் இது. குறிப்பாக இந்தியா போன்று வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சமானிய மக்களுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சிறந்த நுழைவு வாயிலாக உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது சிறந்த தேர்வு தான், ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது முதலீடு செய்யத் தொடங்குவது என்பது பல நபர்களின் கேள்வியாக உள்ளது,
மியூச்சுவல் ஃபண்ட் என்பது முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட முதலீட்டாளர்களின் மூலம் பணத்தைப் பெற்று, பின்னர் அந்த தொகை பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன.
முதலீட்டாளர்களின் சார்பாக, முதலீட்டு முடிவுகளை எடுக்கும் தொழில்முறை நிதி மேலாளர்களால் இவை நிர்வகிக்கப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்கள் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அதன் பங்குகளை வாங்குகிறீர்கள். உங்கள் முதலீட்டின் மதிப்பு, ஃபண்டில் உள்ள பத்திரங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் மாறுபடும். மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு அவற்றின் நிகர சொத்து மதிப்பின் (NAV) அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
கூட்டு வட்டி பலன்களுக்காக ஆரம்பத்திலேயே தொடங்குதல் நல்லது: மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆரம்பத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று கூட்டு வட்டியாகும். கூட்டுவட்டி என்பது உங்கள் ஆரம்ப முதலீட்டில் மட்டுமல்ல, காலப்போக்கில் உருவாக்கப்படும் வருமானத்திலும் வருமானம் ஈட்டுவதைக் குறிக்கிறது. உங்கள் பணம் எவ்வளவு காலம் முதலீடு செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு கூட்டு வட்டி அதிகரிக்கும்.
இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம். சராசரியாக 12% ஆண்டு வருமானத்தில் மியூச்சுவல் ஃபண்ட் SIP (சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) இல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலப்போக்கில் உங்கள் முதலீடு எவ்வாறு வளர்கிறது என்பதைப் பார்ப்போம்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு: ரூ. 4.13 லட்சம்
10 ஆண்டுகளுக்குப் பிறகு: ரூ.11.55 லட்சம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு: ரூ. 49.16 லட்சம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு: ரூ. 1.47 கோடி ஒரு SIP-இல்,
நீங்கள் ஒரு நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்கிறீர்கள், விலைகள் குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களையும், விலைகள் அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களையும் வாங்குகிறீர்கள் என்றால் காலப்போக்கில், இந்த சந்தை ஏற்ற இறக்கங்கள் இருக்கும் பட்சத்திலும் வருவாயை அதிகரிக்க உதவும்.
இளம் தொழில் வல்லுநர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முன்கூட்டியே தொடங்குவது சாதகமானது. மேலும், நீங்கள் ஒரு இளம் தொழில் வல்லுநராக இருந்தாலும் அல்லது ஓய்வு காலத்தை நெருங்கிவிட்டாலும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.
காலப்போக்கில் நிலையான முதலீடு, உங்கள் நிதி இலக்குகளை எளிதாக அடைய உதவும். சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டாம், உங்கள் நிதி ஆலோசகரை அணுகி சுய விருப்பத்தின் பெயரில் முதலீட்டைத் தொடங்குங்கள், மற்றும் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்கக் கூட்டு வட்டி முறையைப் பயன்படுத்துங்கள்.