மியூச்சுவல் ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களின் தொகையையும் ஒன்று திரட்டி, பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் போன்ற பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்யும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் லாபம் பெற முடியும் என்றாலும், சந்தையில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருப்பதால், உங்களுக்கு சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம். இளம் முதலீட்டாளர்களாக இருந்தால் முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
திட்டத்தின் வகையை புரிந்து கொள்ளுங்கள்:
பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையும் தனித்தனி இயல்புடையது. உங்கள் தேவைக்கேற்ற வகையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
திட்டத்தின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ்:
நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் கடந்த கால பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது என்றும் கவனிக்க வேண்டும் . அதன் ரிட்டர்ன்ஸ் மற்றும் ஆபத்து ஆகியவற்றையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.
12 மாத ரிட்டன்ஸ்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஒரு வருடத்தில் எவ்வளவு வருமானத்தை வழங்கி உள்ளது என்பது போன்ற விவரங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் . அப்பொழுது தான் குறுகிய கால இடைவெளியில் எவ்வளவு திறம்பட பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு எப்படி பெர்ஃபார்மன்ஸ் செய்துள்ளது என்ற விவரங்கள் தெரியவரும்.
வட்டி விகிதங்கள்:
வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும் போது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எவ்வாறு செயல்பட்டு உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
ஃபண்ட் ஹவுஸ் நற்பெயர்:
சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவிலான லாபத்தை பெற்று தரும். இதனை பற்றிய விவரங்களை செய்தித்தாள்கள்,வீடியோக்கள் மற்றும் இன்டர்நெட்களில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் முக்கிய முதலீட்டு முடிவை எடுக்க முடியும். முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய இலக்கு என்ன என்பதை தீர்மானியுங்கள். அடுத்ததாக உங்களுக்கு வரும் அத்தியாவசிய செலவுகளையும், கவனித்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும்.
திட்டத்தின் செலவைக் கவனிக்கவும்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் நிர்வகிப்பு செலவுகளை ஈடுகட்ட “expense ratio” என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. குறைந்த வருடாந்திர கட்டணம் கொண்ட திட்டங்கள், நீண்ட காலத்திற்கு அதிக லாபத்தைப் பெற்று தரும்.