சேமிப்பு அல்லது முதலீடு என மேற்கொள்ளும் போது அதற்கென ஒரு இலக்கை நிர்ணயம் செய்து விட்டால் நாம் ஒழுக்கமான முறையில் நம்முடைய சேமிப்பு பழக்கத்தையும் முதலீட்டு பழக்கத்தையும் தொடர முடியும். அந்த வகையில் குழந்தை கல்விக்கான முதலீடு ,ஓய்வு காலத்திற்கான முதலீடு என பிரித்துக் கொண்டு நம்முடைய முதலீடுகளை நாம் திட்டமிடலாம்.
பெரும்பாலானவர்கள் விரும்பக்கூடிய ஒரு சேமிப்பு கருவியாக இருப்பது மியூச்சுவல் ஃபண்டுகள். குறிப்பாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளப் போகிறோம். எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்ற நடைமுறையில் மாதம் தோறும் 5000 ரூபாயை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நாம் செய்யக்கூடிய அந்த குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் ஒரு ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி அடைகிறது என வைத்துக்கொண்டால் 20 ஆண்டுகளில் உங்களிடம் 50 லட்சம் ரூபாய் இருக்கும். இதில் 12 லட்சம் ரூபாய் மட்டுமே நீங்கள் செய்த முதலீடு. மீதமுள்ள 38 லட்சம் ரூபாய் காம்பவுண்டிங் முறையில் உங்களுக்கு கிடைத்த வருமானம் ஆகும். இந்த 38 லட்சம் ரூபாய் 20 ஆண்டு காலமாக நீங்கள் ஒழுக்கமான முறையில் செய்த முதலீட்டுக்காக கிடைக்கும் ஒரு பரிசுத்தொகை என வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் இந்த 5000 ரூபாய் என்பதை மாதம் தோறும் 10000 ரூபாய் என்ற அடிப்படையில் அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது உங்களால் 20 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் என்ற இலக்கினை எட்ட முடியும்.
ஒரு வேளை நீங்கள் உங்களுடைய முதலீடு காலத்தை 20 இலிருந்து 25 ஆண்டுகள் என நீட்டிக்கும் பட்சத்தில் மாதந்தோறும் 5000 ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 25 ஆண்டுகள் முடிவில் 95 லட்சம் கிடைக்கும். மாதம் தோறும் 10000 ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு 25 ஆண்டுகளின் முடிவில் 1.9 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கும். இவ்வாறு எதிர்காலத்திற்காக முதலீட்டினை மேற்கொள்ளும் போது பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் அதனை கணக்கீடு செய்து திட்டமிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் குழந்தையின் கல்விக்காக உங்களுக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றால் 25 ஆண்டுகளில் அது 35 லட்சமாக மாறும்.