வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இந்த நிலையில் நவம்பர் 18ம் தேதியான, இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆபரணம் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ. 6,995 என்ற விலையில் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,400க்கு மேல் இருந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,000க்கு கீழ் சரிந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.55,960 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.