இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான Adani Green Energy, அடுத்த சில மாதங்களில் சர்வதேச பத்திரங்கள் மற்றும் கடன்கள் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 2 பில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் அடுத்த சில நாட்களில் $ 600 மில்லியன் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டம், போர் ஆகியவற்றின் காரணமாக Bond முதலீட்டுகான வருவாய் அதிகம் இருக்க வேண்டுமென முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் கடன் பத்திர வெளியீட்டின் மூலமாக காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் திட்டங்களில் ஈடுபட்டுள்ள Adani Green இன் ராஜஸ்தானை தளமாகக் கொண்ட மூன்று துணை நிறுவனங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் அரையாண்டுக்கு பிறகு 20 ஆண்டு கால ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள துணை நிறுவனத்திற்கு தகுதியான தனியார் நிறுவன முதலீடுகள் மூலமாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
DBS, Mizuho, SMBC, MUFG மற்றும் ING போன்ற சர்வதேச வங்கிகளுடன் Adani Green நிறுவனம் $3.4 பில்லியன் கட்டுமான கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. நிறுவனம் இப்போது குறுகிய கால கடன்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும், கடன் முதிர்ச்சியை 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது. எதிர்கால திட்டங்களுக்கு ஆதரவாக கட்டமைப்பு ஒப்பந்தத்தை $5 பில்லியனாக விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி, உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா என்று கூறப்படும் சூரிய சக்தி திட்டத்தில் செயல்பாட்டு திறன் விரிவாக்கத்தை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. 30 ஜிகாவாட் திறனில் 2.2 ஜிகாவாட்டை செப்டம்பரில் செயல்படுத்தியது.
