அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் சமூக ஊடக நிறுவனம் கிரிப்டோ வர்த்தக நிறுவனமான Bakkt ஐ வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் Bitcoin விலை முதன்முறையாக 94,000 டாலருக்கு மேல் சாதனை படைத்துள்ளதாகா Roysters அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் ஆட்சி 2025 ஆம் ஆண்டு முதல் துவங்க உள்ள நிலையிலும் கிரிப்டோகரன்சி மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், பிட்காயின் $94,000 க்கு மேல் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. இது கடைசி வர்த்தக நேர முடிவில் $94,078 என்ற சாதனையை எட்டியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள IG இன் சந்தை ஆய்வாளரான Tony Sycamore கூறுகையில், டிரம்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் பிளாக்ராக்கின் பிட்காயின் ETF மூலம் Nasdaq இல், முதல் நாள் வர்த்தகத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் பிட்காயின் மீது முதலீடு செய்வதால் சாதனை உயர்வை எட்டியுள்ளதாக கூறினார்.
ஆஸ்திரேலிய ஆன்லைன் தரகர் பெப்பர்ஸ்டோனின் ஆராய்ச்சித் தலைவரான Chris Weston , பிட்காயினை வாங்குவதற்கான போட்டி வெகுவாக உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி விலை ஏற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு கிரிப்டோகரன்சிகள் உயர்ந்துள்ளன, ஏனெனில் டிஜிட்டல் சொத்துக்களுக்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆதரவு, குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட ஒழுங்குமுறை ஆட்சிக்கு வழிவகுக்கும் மற்றும் பட்டியலிடப்படாத சில மாதங்களுக்குப் பிறகு பிட்காயின் நடைமுறைப்படுத்தப்படலாம் என வர்த்தகர்கள் பலரும் பெட் கட்டி வருகின்றனர்.
தற்போதைய கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீட்டு ஆர்வம், உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தையின் மதிப்பை 3 டிரில்லியன் டாலருக்கு மேல் கொண்டு சென்றது. இது பகுப்பாய்வு மற்றும் தரவுத் தொகுப்பான CoinGecko அறிக்கையின்படி அதிகபட்ச சாதனையாக உள்ளது.