நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இன்று தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து 4 மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் குறைவான விலையில் இருந்தது. ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக அதிகரித்துள்ளது.
நேற்று (நவம்பர் 20ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து, ரூ.7,115-க்கும், ஒரு சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.56,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை, கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,145க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,160-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை மீண்டும் தாண்டியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அதிகரித்து வரும் Geopolitics பதட்டங்கள், வீழ்ச்சியடைந்த அமெரிக்க டாலர் மற்றும் Bond yields மற்றும் நேர்மறையான உலகளாவிய குறிப்புகள் அனைத்தும் உள்நாட்டு எதிர்கால சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு கரணங்கலாகும்.