இந்திய தொழிலதிபரணா Gautam Adani, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், அந்த நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் William Ruto அறிவித்துள்ளார்.
கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் தான் கையெழுத்தானது .
அமெரிக்க குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டன. இந்தியப் பங்குச்சந்தையின் போக்கு இன்று காலை கடும் வீழ்ச்சியை சந்தித்து சரிவில் முடிந்தது. இந்நிலையில், கென்யாவின் அறிவிப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
இது குறித்து அதிபர் William Ruto நிகழ்த்திய தேசிய உரையில், ”தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.
அதானி குழுமம் மறுப்பு: இது தொடர்பாக அதானி குழுமம் , Adani Green நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் Exchange Commission ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம் என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளளார்.
“குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்” என்று அமெரிக்க நீதித்துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.
“குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்” என்று அமெரிக்க நீதித்துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும்.
அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக ஏற்கிறோம் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.