2010 ஆம் ஆண்டில், பிட்காயின் முதல் முறையாக வர்த்தகம் செய்யப்பட்டது, அதன் விலை ஒரு ரூபாயில் இருந்து தொடங்கப்பட்டது. பின் 2024 க்கு வேகமாக முன்னேறி, பிட்காயின் விலை 100,000 டாலராக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிட்காயினில் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால் எவ்வளவு சம்பாதித்திருக்க முடியும்? 2009 இல் தொடங்கப்பட்ட பிட்காயின், அதன் ஆரம்ப நாட்களில் எந்த மதிப்பும் இல்லாத ஒரு தெளிவற்ற டிஜிட்டல் நாணயமாக இருந்தது.
2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க டாலர்களில் பிட்காயினின் மதிப்பு ஒரு நாணயத்திற்கு $0.05 ஆக இருந்தது அதாவது, 2010ல் ஒரு டாலர் ₹45.73க்கு சமமாக இருந்தது என்பதை கணக்கில் கொண்டால், ஒரு நாணயத்தின் விலை ₹2.29 ஆக இருக்கும்.
அப்படியெனில் ரூ.1,000 ÷ ரூ 3.38 = 295.85 BTC காயின்களை வாங்கியிருப்பீர்கள். நவம்பர் 2024 நிலவரப்படி, பிட்காயின் ஒரு நாணயத்தின் விலை சுமார் 98,000 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு டாலருக்கு ரூ.84.45 என்ற தற்போதைய மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி, 1 பிட்காயினின் விலை: $98,000 (dollar) × ரூ 84.45 = ரூ 82,76,100 ஆக இருக்கும்.
எனவே உங்களிடம் இருக்கும் 295.85 BTC இன் மதிப்பு: 295.85 BTC × ரூ. 82,76,100 ≈ ரூ. 24,47,32,78,185 (ரூ. 244.8 கோடி) ஆக இருக்கும். பிட்காயினில் உங்கள் ஆரம்ப முதலீடு ரூ. 2,447 கோடியாக இருக்கும். இது 14 ஆண்டுகளில் 244,732,78,085 சதவீதம் (24.47 பில்லியன் சதவீதம்) வருமானம் கொடுத்துள்ளது.
இதை அடிப்படையாக வைத்து அதே காலகட்டத்தில் பங்குச் சந்தை, தங்கம் அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தால்கூட இந்த லாபம் கிடைத்திருக்காது.
முதன் முதல் 2010 ஆம் ஆண்டு பிட்காயின் மூலம் இரண்டு பீட்சாக்களை வாங்க 10,000 BTC பயன்படுத்தப்பட்டது, இது Fiat நாணயத்தில் அதன் முதல் மதிப்பீட்டைக் குறிக்கிறது.
அதன்பின் 2017 இல் பிட்காயின் அதன் 20,000 டாலரை எட்டி புது மைல்கல்லை எட்டியது. 2020 மற்றும் 2021 இல் பிட்காயினில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உட்பட முன்னணி பிசினஸ் தலைவர்கள் முதலீடு செய்து, பல புதிய காயின்களுக்கும் ஆதரவு அளித்தனர்.
2023 ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தையில் 1 பிட்காயின் ETF களை கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு கிரிப்டோகரன்சிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பிட்காயின் விலை 98,000 டாலரை எட்டியுள்ளது.