அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு உடனடியாக 3 நாடுகள் மீது விரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
டொனால்டு டிரம்ப் சமுக வலைத்தளத்தில் செய்த பதிவின் படி, தான் ஆட்சிக்கு வந்த உடனே மெக்சிகோ மற்றும் கனடா நாட்டின் இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும், சீனா மீதும் சீன பொருட்கள் மீதும் 25 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பெருமளவிலான போதைப் பொருள்கள் குறிப்பாக,
The synthetic opioid fentanyl என்ற போதைப் பொருள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாக புகார் உள்ளது.
இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் சீன அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப், சீனா அரசு அமெரிக்காவுக்குள் synthetic opioid fentanyl கடத்துவதை நிறுத்தும் வரையில் இந்த கூடுதல் 10 சதவீத வரி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், உற்பத்தி துறைக்கான வேலைவாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப கொண்டு வரவும், Trade deals களை அதிகரிக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரி விதிப்பால் சீனாவில் இருந்து அடுத்தடுத்து பல நிறுவனங்கள் இந்தியாவுக்குப் படையெடுக்கும் காரணத்தால் டிரம்ப், தனது வரி விதிப்பு பட்டியலில் இந்தியாவை நீக்கிவிட்டார் எனத் தெரிகிறது. கடந்த டிரம்ப் ஆட்சிக் காலத்தில் வரி விதிப்பாலும், கொள்கை மாற்றத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டது மெக்சிகோ, சீனா, கனடா தான்.
எந்தவொரு போதைப்பொருள் வியாபாரிகளும் இதைச் செய்து பிடிபட்டால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனாவின் பிரதிநிதிகள் என்னிடம் சொன்னார்கள், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அதை ஒருபோதும் பின்பற்றவில்லை,” என்று அவர் கூறினார்.
இதேவேளையில் இந்த பட்டியலில் இந்தியாவை டொனால்டு டிரம்ப் சேர்க்காதது வியப்பாக உள்ளது, டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் மோடி உடனான நட்பை பாராட்டினாலும், இந்தியா மீது வரி விதிப்பதில் உறுதியாக இருந்தார், ஆனால் தற்போது வரி விதிக்கப்படவில்லை.
சில முக்கிய டிரம்ப் ஆதரவாளர்கள் கட்டண அச்சுறுத்தலை மிகவும் நுணுக்கமான பார்வையை எடுத்தனர், இது அமெரிக்க வாக்காளர்களுக்கு அவர் அளித்த உறுதிமொழியை அடைவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தை தந்திரம் என்று பரிந்துரைத்தனர்.