செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
செயல்படாத வங்கி கணக்குகள் தொடர்பான ரிசர்வ் வங்கி மேற்பார்வை துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வங்கி கணக்குகள் செயலற்று போவதற்கும், Unclaimed
Deposit கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் மற்றும் நீண்ட காலமாக transaction நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள்
KYC, தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் தெரியவந்துள்ளன.
இதுகுறித்து வங்கிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டைவிட, செயல்படாத கணக்குகள் அல்லது Unclaimed கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது.
எனவே, வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
KYC மூலம் தடையற்ற முறையில் புதுப்பிக்க, Mobile அல்லது Internet Banking, Other Bank Branch மற்றும் வீடியோ மூலமாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அரசுகளால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகள், தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக்கூறி முடக்கப்படுவதை காண முடிகிறது.
செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை, செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை, Senior Supervision மேலாளருக்கு, வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.