ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் பங்கேற்று பேசினார் அப்போது அவர் இந்தியாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட Make in India திட்டத்தை பாராட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியிடம் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உள்ளது அது ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்துக்கு இணையாக உள்ளது ‘மேக் இன் இந்தியா’ திட்ட முயற்சி பாராட்டுக்குரியது மேலும் இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது என்று பேசியிருந்தார்.
இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது எங்கள் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் நிறுவ தயாராக உள்ளோம் மேலும் இந்திய பிரதமரும், இந்திய அரசும், நிலையான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர் என்று மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், Putin பேசியிருந்தார்.
இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம் ரஷ்யாவில் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான தேவை உள்ளது.
கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர் அளவுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம். பிரதமர் மோடியின் ‘Make in India project’ பாராட்டக் கூடியது என்று இவ்வாறு அவர் பேசினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் Vladimir Putin அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புக்குள் ரஷ்யாவின் இறக்குமதி மாற்றுத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி Putin மேலும் பேசினார். வெற்றிகரமான ரஷ்யாவின் புதிய தயாரிப்புகள் மேற்கு நாடுகளின் தயாரிப்புகளுக்கு மாற்றாக இருக்கிறது. இந்தப் புரட்சி, பயனீட்டாளர் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம், வேளண்மை உள்ளிட்ட துறைகளில் தொடர்கிறது என்றார் அவர்.
அதிபர் Putin, சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்றும் வலியுறுத்தினார்.