தற்போது எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இந்தியாவில் அதிகரித்துள்ளது. ஏதேனும் ஒரு மாதத்தில் போதிய தொகை இல்லாததால் உங்களுடைய SIP payment -ஐ தவறவிட்டீர்கள் என்றால் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் போலியோவில் என்ன ஆகும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
SIP முதலீடு நிறுத்தப்படும்: ஒரு முதலீடு பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் எந்த ஒரு தடையும் இல்லாமல் அந்த முதலீட்டினை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும் . அப்பொழுதுதான் காம்பௌண்டிங் மூலம் நம்மால் சிறந்த லாபத்தை பெற முடியும்.
ஒரு வேளை தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஏதேனும் ஒரு SIP payment -ஐ நீங்கள் தவற விட்டீர்கள் என்றால் SIP நிறுத்தப்படலாம். சில மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதியில் தொகையை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய SIP-யை டெர்மினேட் செய்து விடும். இதனால் உங்களுடைய முதலீடு தடைப்பட்டுவிடும்.
முதலீட்டு வாய்ப்பு தவறுகிறது: ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தான் நாம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறோம். ஆனால் அதில் இவ்வாறு SIP payment -களை தவறவிடும் போது ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பை நாம் இழக்கிறோம். அந்த மாதத்தில் சந்தை வீழ்ச்சி அடைந்து குறைந்த விலையிலேயே கூட யூனிட்கள் கிடைத்திருக்கலாம். அத்தகைய வாய்ப்புகளை தவற விடுவது நல்லதல்ல.
ரூபாய் காஸ்ட் ஆவரேஜிங்: SIP என்ற இந்த நடைமுறையே ரூபி காஸ்ட் ஆவரேஜிங் முறையில் முதலீட்டாளர்களுக்கு லாபம் தரக்கூடியது. அதாவது முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை மாறிவரும் விலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது வாங்கி வைத்துக் கொள்வதுதான். இதில் தொடர்ச்சியாக செய்து வரும் முதலீட்டை திடீரென நிறுத்தினால் உங்களுடைய ரூபி காஸ்ட் ஆவரேஜிங்கில் பாதிப்பு ஏற்படும்.
மொத்த யூனிட்டுக்களின் எண்ணிக்கை குறையும்: திடீரென எஸ் ஐபி பேமெண்டை செய்யாமல் விட்டால் உங்கள் மியூச்சுவல் ஃபண்டு போர்ட்போலியோவில் இருக்கும் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுக்களின் மொத்த எண்ணிக்கை குறையும். இது மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அபராதம்: சில மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதியில் தேதியில் SIP payment -ஐ செலுத்தவில்லை என்றால் அபராதங்களை விதிக்க நேரிடலாம். எனவே SIP முறையில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து தெளிவாக புரிந்து கொள்வது நல்லது. சில மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் SIP-யை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது ஃபிளெக்ஸி முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு தொகையை குறைத்து கொள்வது என்பன உள்ளிட்ட வசதிகளை வழங்குகின்றன. அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.