
நிதித் துறையில் AI-யின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் கொள்கைகளை வகுக்க 8 பேர் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
AI பொறுப்பு மற்றும் நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பிற்கான குழு IIT Pompeii-ன் புஷ்பக் பட்டாச்சார்யா தலைமையில் இருக்கும். கல்வித்துறை, வணிகம், அரசு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களின் வல்லுநர்கள் மற்ற குழு உறுப்பினர்களில் அடங்குவர்.
உலகளவில் நிதித்துறையில் AI -யின் செயல்பாட்டை இக்குழு மதிப்பாய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் இக்குழு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவானது AI உடன் தொடர்புடைய ஆபத்துகளைக் கண்டறிந்து, வங்கிகள், NBFCகள், FinTechs, PSOகள் போன்றவை உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கான மதிப்பீடு, தணிப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பையும் அதன் விளைவாக இணக்கத் தேவைகளையும் பரிந்துரைக்கும்.
இந்திய நிதித் துறையில் AI மாதிரிகள் பயன்பாடுகளை பொறுப்பான, நெறிமுறையாக ஏற்றுக்கொள்வதற்கான நிர்வாக அம்சங்கள் உள்ளிட்ட கட்டமைப்பை இந்தக் குழு பரிந்துரைக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கமிட்டி தனது முதல் கூட்டத்தின் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.