
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 டிசம்பர் மாதத்தில் ரூ.1.77 லட்சம் கோடி GST வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2023 ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகம். 2023 ஆண்டு இதே மாதத்தில் GST tax revenue ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது.
2024 டிசம்பர் மாதத்தில் கிடைத்துள்ள மொத்த GST வசூலில், மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ. 32,836 கோடியாகவும், மாநில GST வசூல் ரூ. 40,499 கோடியாகவும், ஒருங்கிணைந்த GST வசூல் ரூ.47,783 கோடியாகவும், Chess வசூல் ரூ. 11,471 கோடியாகவும் இருந்துள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பரில் GST வருவாய் 7.3 சதவீதம் உயர்ந்து ரூ. 1.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதத்துக்கான புள்ளி விவரங்களின்படி பார்த்தால், உள்நாட்டு Transactions-லிருந்து GST 8.4 சதவீதம் உயர்ந்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் 4 சதவீதம் அதிகரித்து ரூ. 44,268 கோடியாகவும் உள்ளது. முன்னதாக, 2024 நவம்பர் மாதம் GST 8.5 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 1.82 லட்சம் கோடியாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வசூல் ஏப்ரல் மாதத்தில் கிடைத்தது. அந்த மாதத்தில் மொத்தம் ரூ. 2.10 லட்சம் கோடி GST வசூலானது.
2024 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டியின் கீழ் Refund தொகையாக ரூ. 22490 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகம் ஆகும். Refund-களை சரிசெய்த பிறகு Net GST collection ரூ. 1.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத மதிப்பை விட 3.3 சதவீதம் அதிகமாகும்.
இதை தொடர்ந்து, இந்த வரி வசூல் அதிகரிப்பு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என வருமான வரித்துறை பகுத்தாய்வு தெரிவிக்கிறது.