
2025ஆம் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. முதல் நாள் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7,180 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 57,440 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்து 7260 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 58ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது.
மேலும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில் தங்கத்தின் விலையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு புதிய உச்சத்தை எட்டக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையானது. கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் ஒரு சவரனுக்கு 22 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.