
உலகளவியல் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக 2024 இல் இந்திய பங்குச் சந்தைகள் அதிக அளவிலான ஏற்ற, இறக்கத்தை பதிவு செய்திருந்தது. ஆனாலும் இந்த சந்தை சரிவிலும் சில மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் அதிக லாபத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன. அதில் 2025 இல் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இவைதான்.
டிசம்பர் 23, 2024 நிலவரப்படி, உலகப் பொருளாதாரக் காரணிகளால் இந்தியப் பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. S&P BSE சென்செக்ஸ் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தோராயமாக 8.59% உயர்ந்துள்ளது, இது ஒரு பாசிட்டிவ் போக்கையே காட்டுகிறது.
இருப்பினும், சமீபத்திய வாரங்கள் சந்தை பெரிய ஏற்ற, இறக்கங்களை பதிவு செய்து வருகிறது. டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நிஃப்டி 50 மற்றும் S&P BSE சென்செக்ஸ் இரண்டும் 3%க்கும் அதிகமான சரிவை பதிவு செய்துள்ளன. இது 2022 ஆம் ஆண்டில் ஜூன் மாத சரிவிற்குபின் நடந்த மிகப்பெரிய சரிவைக் காட்டுகிறது.
இந்த சந்தை ஏற்ற இறக்கத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) கணிசமான பங்கு வகித்துள்ளனர். அக்டோபர் மற்றும் நவம்பரில் கணிசமான வெளியேற்றங்களுக்குப் பிறகு, டிசம்பரில் FII கள் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் மட்டும் இந்திய பங்குகளில் ரூ.24,454 கோடி முதலீடுகள் வந்துள்ளன.
ஆனாலும் எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ மற்றும் FMCG போன்ற சில துறைகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி வெளியேறியுள்ளன, இது FII களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு உத்திகளைக் காட்டுகிறது.
நீங்கள் மாதம் 100 ரூபாய் வைத்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.. சிறு துளி பெரு வெள்ளம் என்பதை மனதில் வைத்து இந்த 2025 இல் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
2025 முதலீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
- Large Cap Mutual Funds
- Flexi Cap Mutual Funds
- Value Funds
- Aggressive Hybrid Funds
- Equity-Linked Savings Schemes (ELSS) Funds
மேற்குறிப்பிட்டு திட்டங்களில் அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிதி ஆலோசகரின் அறிவுரையின்கீழ் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்கள் நிறைந்தவை.