
கடந்த மாதம் பங்குச் சந்தையின் நிலையற்ற நிலைமைகள் இருந்தபோதிலும், இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் Mutual Fund (MF) வழியாக தங்களுடைய முதலீடுகளை பங்குகளில் செலுத்தி, ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். 2024 டிசம்பர் மாதத்தில், முறையான முதலீட்டுத் திட்ட (SIP) மூலம், மொத்தமாக ரூ.26,460 கோடி முதலீடு பதிவாகியுள்ளதாக, Mutual Fund தொழில்துறை வர்த்தக அமைப்பான AMFI வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்கு மத்தியில், நீண்ட கால முதலீடுகளின் மீதான நம்பிக்கையால், முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த Mutual Fund திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்ததாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2021 மார்ச் மாதம் முதல், பங்கு நிதிகளில் நிகர முதலீடுகள் 46வது மாதமாக தொடர்ந்தும் அதிகரித்துள்ளன. இது பங்குத் திட்டங்களில் முதலீட்டாளர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது என்று யூனியன் MF பங்குத் தலைவர் Sanjay Pembalkar கூறினார்.
பங்குத் திட்டங்களில், நடுத்தர மற்றும் சிறிய மூலதனப் பிரிவுகள் சேர்ந்து ரூ.9,761 கோடி முதலீடுகளைப் பதிவு செய்துள்ளன, இது ஏப்ரல் 2019 முதல் ஒரு புதிய மாதாந்திர உச்சமாகும். குறிப்பாக, துறைசார் மற்றும் Thematic funds இந்த வகைக்குள் மிகப்பெரிய நிகர முதலீடு ரூ.15,332 கோடியாக பதிவாகியுள்ளன.
SIP, வாயிலாக செய்யப்பட்ட முதலீடு 26,459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில், இது 25,320 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டின் டிசம்பருடன் ஒப்பிடும்போது, எஸ்.ஐ.பி., முதலீடு 233 சதவீதம் அதிகரித்தது.
மொத்த Mutual Fund Polio-களின் எண்ணிக்கை, டிசம்பரில் முன்பு இல்லாத வகையில், 22.50 கோடியாக உயர்ந்தது. நவம்பரில் இது, 22.03 கோடியாக இருந்தது.
இந்த முன்னேற்றங்கள், பங்கு நிதிகளில் முதலீடுகளின் வேகம், சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையை மீறி, இந்திய முதலீட்டாளர்களின் முதிர்ச்சியையும், புதிய அணுகுமுறைகளையும் பிரதிபலிக்கின்றன.