பட்ஜெட் 2025 இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படும் நிலையில், வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய அரசாங்க வட்டாரங்களின் தகவலின்படி, இந்த பட்ஜெட்டில் வரி முறை தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட வாய்ப்பு உள்ளது.
2025 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் புதிய வரி கட்டமைப்பின் குறிக்கோள், மக்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் அதிகமாகச் செலவிட உதவுவதாகும். இந்த வழியில், தனிநபர்கள் தங்கள் வருமானத்தைப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதார சுழற்சியை ஊக்குவிக்க முடியும்.
ஆனால் எங்கே இருக்கும் முக்கிய கேள்வி.. பழைய வருமான வரி திட்டத்தில் விலக்கு கிடைக்குமா? என்பது தான். ஆனால் அதுக்குறித்து எந்தவித ஆதாரமும் இல்லை. எனினும் இந்தமுறை பட்ஜெட்டில் அரசாங்கம் வருமான வரி விலக்கில் மாற்றங்களைச் செய்யும். ஆனால், இந்த விலக்கு புதிய வரி முறையில் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
புதிய வரி முறையை மேலும் Attractive-வாக மாற்ற, விலக்கின் நோக்கத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய வரி முறையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம். முதல் அறிவிப்பு நிலையான வருமானத்தில் விலக்கு. மற்றொறு அறிவிப்பு ரூ.15-20 லட்சம் வரி அடுக்கில் உள்ளவர்களுக்கு சலுகை வழங்கலாம்.
standard deduction limit அதிகரிக்கப்படுமா?
இந்தமுறை, புதிய வரி முறையில் நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையான விலக்கு வரம்பு ரூ. 75,000 என்றால், அடுத்த பட்ஜெட்டில் இதனை ரூ. 1 லட்சமாக அதிகரிக்க அரசு ஆலோசனை செய்கின்றது. கடந்த பட்ஜெட்டில், இந்த விலக்கு வரம்பை ரூ. 50,000-இல் இருந்து ரூ. 75,000-ஆக உயர்த்தியது.
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்திலிருந்து ₹1 லட்சம் வரை வரி விலக்கினை பெறக்கூடும். இதன் மூலம், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் நேரடியாக பயனடைவார்கள்.
இதனால், வரி செலுத்துவோரின் கைகளில் அதிக பணம் இருக்கும், இதன் மூலம் அவர்களது செலவுத் திறன் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
20% வரி அடுக்கின் வரம்பு அதிகரிக்குமா?
இரண்டாவது நல்ல செய்தி என்னவென்றால், புதிய வரி முறையில் 20% வரி அடுக்கின் வரம்பை அரசாங்கம் அதிகரிக்க முடியும். ஆதாரங்களின்படி, இதுவரை ரூ. 12-15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதை ரூ. 20 லட்சம் வருமானமாக அதிகரிக்கலாம்.
இந்த மாற்றம் குறிப்பாக ரூ.15-20 லட்சத்திற்கு இடையில் வருமானம் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த மாற்றம் நடுத்தர மற்றும் உயர் வருமானக் குழு வரி செலுத்துவோருக்கு மிகவும் பயனளிக்கும், ஏனெனில் அவர்கள் முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியிருக்கும்.
2025 பட்ஜெட்டில் வரி தொடர்பான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும். இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் எடுக்கும். இது குறித்து நிதி அமைச்சகத்தால் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்ய முன்னதாக, நிதி பற்றாக்குறை கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். தற்போது நிதி பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் நிலையில், இதனை 2026 ஆம் ஆண்டுக்குள் 4.5% க்கும் கீழே குறைப்பதற்கான இலக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
2025 பட்ஜெட்டின் மூலம், புதிய வரி முறையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், அதிக வரி செலுத்துவோர்-நட்பு பொருளாதாரத்தை நோக்கி புதிய தொடக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.