அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதே நேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா இறக்குமதியை சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததுள்ளது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கும் போது, ரூபாயை வலுப்படுத்தவும், அதிக மதிப்பிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரை விற்பனை செய்கிறது.
ரூபாய் மதிப்பு சரிவு சாமானியர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். முதலில், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அதிக விலையில் கிடைக்கும், இது பொதுவாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துகிறது.
கடன் வாங்கும்போது சராசரி நபரும் அதிக வட்டி விகிதங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு குறைவதால், வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் மற்றும் வெளிநாட்டுக் கடன் வாங்குவதற்கான செலவும் அதிகரிக்கும். இதனால் அதிக கடன் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இதன் விளைவாக, இது எந்தவொரு நிதிச் சிக்கலும் இல்லாமல் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்.
இதனால், சாமானியர்களுக்கு ரூபாய் மதிப்பு சரிவின் விளைவாக அதிக விலைகள், கடன் செலவுகள் மற்றும் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வதற்கு நிச்சயமாக கடுமையான சூழ்நிலை உருவாகும்.