கடந்த ஆண்டு ஜூலையில் ஆபரணத்தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் சவரன் ரூ.51,000-க்கு கீழ் சென்ற தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்று விற்பனை செய்த அதே விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.60,200-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,525-க்கும் விற்பனையானது.
அதே போல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
அமெரிக்காவில் கடன் பத்திரங்களின் வருவாய் குறையத் தொடங்கியதால், அது தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடன் பத்திரங்களை விற்று, அந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது.