

ஓய்வூதிய திட்டம் இதப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா, அடிப்படையில் இதன் மூலமா என்ன என்ன பலன்கள் கிடைக்குமென்று தெரிஞ்சுகலாமா?
அதன்மூலமா கிடைக்கின்ற முக்கியமான பலன்கள் என்றால், குறிப்பாக 25 ஆண்டுகள் மத்திய அரசு பணியாளராக பணியாற்றிருந்தார்கள் என்றால், அவர்களுடைய அடிப்படை ஊதியதிலிருந்து 50% சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது ஒரு முக்கியமான மாற்றம்.
அதே போல் பணியாளர் ஒருவேளை உயிரிழந்து விட்டால் அவருடைய அடிப்படை ஊதியத்தில் இருந்து 60% ஓய்வூதியமாக வழங்கப்படும். அடுத்ததாக 10 ஆண்டுகள் பணியாற்றிருந்தால் அவர்களுடைய ஓய்வூதியமாக 10000 ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல், கருணைத்தொகை புதிய ஓய்வூதிய திட்டம் அதாவது “NPS” என்று சொல்லக்கூடிய அந்த திட்டத்தில் கருணைத்தொகை கிடையாது. ஆனால்
புதியதாக அறிமுகப்படுத்தபட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊதியம்+அவங்களுடைய “DA” இதை இரண்டையும் சேர்த்தால், அந்த 10-ல் ஒருபங்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்க்கும் கணக்கிட்டு, அதை அவர்களுக்கான கருணைத் தொகையாக கொடுப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதில் அடுத்ததாக இது யாருக்கெல்லாம் தகுதியானது என்றுப் பார்த்தால், இப்போதைக்கு மத்திய அரசுப் பணியாளர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக முக்கியமாக இதில் கவனிக்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த UPS வந்தவுடனே அதில் மட்டும் தான் இருக்க வேணுமான்லா இல்லை, NPS வேணுமானாலும் UPS வேணுமானாலும் ரெண்டுல எதாவது ஒன்ன அவர்கள் தேர்வு செஞ்சுக்கலாம். அதே மாதிரி மாநில அரசு பணியலாருக்கு இதை செயல்படுத்தலாம என்பதை அந்தந்த மாநிலங்கள் முடிவுப் பண்ணிக்கலாம் என்பதையும் அறிவிச்சுருக்காங்க.