

பழைய ஓய்வூதிய திட்டம், அதே மாதிரி புதிய ஓய்வூதிய திட்டம், இப்ப அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், இந்த திட்டங்களுக்கான வித்தியாசம் என்னவென்று பார்க்கலாமா?
ஊதியம் பிடித்தல், எடுத்துக்குக் கொண்டால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் எந்தவிதமான பிடித்தமே இல்லாமல், ஒட்டுமொத்தமாக அரசோட நிதியிலிருந்து அந்த தொகையைக் கொடுப்பாங்க, அதுனாலதா அத திரும்பக் கொண்டுவரணும்ன்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் முன் வைக்கிறார்கள்.
இதே புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ஏன் எதிர்பார்க்கிறாங்க, அப்டின்னா, ஊழியர்களோட 10% பிடித்தம் செய்யப்படும், கூடுதலாக அரசு 14 சதவீதம் கொடுப்பாங்க, அதிலிருந்து, இப்ப ஒருங்கிணைந்த திட்டத்தில், இந்த அரசு கொடுக்கக்கூடிய 14% என்பது 18.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, ஊதிய மூலதனத்தைக் எடுத்துக்கொண்டோம் என்றால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில், அரசு முழுமையாக அரசு நிதியிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கியது. இப்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணியாளர் ஊதியத்தோடு சேர்த்து, அதை முதலீடு செய்து, அதில் உள்ள இலாபத்திலிருந்து ஓய்வூதியம் கொடுப்பாங்க.
ஓய்வூதியமாக எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற பட்சத்தில், தான் பழைய ஓய்வுதிய திட்டம் மாதிரி 5 % சதவீதம் அடிப்படை ஊதியத்தை, இந்த ஒருங்ணைந்த திட்டத்திலையும் கொடுக்குறாங்க, ஆனால் புதிய ஓய்வுதிய திட்டத்தில், உறுதியானத் தொகையில்லை அப்படின்றதும், அரசு ஊழியர்கள் இதை எதிர்க்கிறதுக்கான முக்கியமான கரணம்.
கருணைத்தொகையை பொறுத்தவரையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 20 லட்சம் வரைக்கும் இருந்தது, ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அது எதுவுமே இல்லாமல் இருந்தது. இப்ப, ஒருங்கிணைந்த திட்டத்தில், கொண்டு வந்திருக்காங்க ஊதியம்+அவங்களுடைய “DA” இதை இரண்டையும் சேர்த்தால், அந்த 10-ல் ஒருபங்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்க்கும் கணக்கிட்டு, அதை அவர்களுக்கான கருணைத் தொகையாக கொடுக்கிறாங்க. இதுதான் முக்கியமான வித்தியாசமாக இருக்கிறது.