

இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டிருப்பதால், மக்கள் கடும் துன்பங்களுக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும், பிப்ரவரி 1 முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில், தங்கத்தின் மீதான வரி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா எனும் கேள்வியும் எழும்பியுள்ளது.
இந்தவகையில், தொடர் உயர்வில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ₹120 விலை உயர்ந்து ₹7730-க்கும், ஒரு சவரன் ₹960 விலை அதிகரித்து ₹61840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ₹1 விலை உயர்ந்து ₹107-க்கு விற்பனை ஆகிறது. அமெரிக்க பெடரல் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது.
டாலருக்கு மாற்றுக் கரன்சியை உருவாக்க முயன்றால், அமெரிக்காவில் உங்கள் பொருட்களை விற்க மறந்திடுங்கள், என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது, போன்ற காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதே அதன் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை 13 மாதங்களில் சவரனுக்கு சுமார் ₹16000 அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தற்போது வரை தங்கம் கடந்து வந்த பாதையை பார்தோம்ண்டா, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் ஒரு சவரன் விலை ₹47360 ஆக இருந்தது.
அடுத்து வந்த நாட்களில், ஏற்ற இறக்கங்களோடு காணப்பட்ட தங்கம், பிப்ரவரி 15 ஆம் தேதி அந்த ஆண்டின் குறைந்த அளவாக ₹459200-க்கு விற்பனை செய்யப்பட்டது, அக்டோபர் 31 ஆம் தேதி அப்போதைய புதிய உச்சமாக ஒரு சவரன் ₹59640-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், ஆண்டின் ஜனவரி 31 ஆம் தேதியான இன்று வரலாறு காணாத ஏற்றமாக ஒரு சவரன் ₹61840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 13 மாதங்களில் தங்கம் சவரனுக்கு ₹15920 விலை அதிகரித்துள்ளது. கவனம் பெற்றுள்ளது.