![](https://panathottam.com/wp-content/uploads/2025/02/Gold-prices-continue-to-rise.jpg)
கடந்த ஆண்டில் 2024-ல் தங்கத்தோட விலையை பார்த்தோம் அப்படின்னா ஒரு ஆண்டு முழுவதுமே ஜனவரிலிருந்து டிசம்பர் வரைக்கும் 10000 ரூபாய் விலை தான் அதிகரித்திருக்கு. ஆனா இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இப்போது வரை 35 நாட்களில் 6000 ரூபாய் அதிகரித்திருக்குது. இது வந்து கிட்டத்தட்ட 11% விலை உயர்வு அடைந்திருக்கு.
இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன , தற்போது சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களுக்கு அமெரிக்கா வரி அறிவிச்சிருக்கு. அதேபோல, சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு வரி அறிவிச்சிருக்கு. இது உலகளவில் ஒரு வர்த்தகப் போர் அப்படிங்கிற ஒரு அச்சுத்தலை ஏற்படுத்தி இருக்குது.
மேலும், இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு அப்படிங்கறதும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கு குறிப்பா, இது டாலர் வலுவடைவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது, மதிப்பு சரியக்கூடிய சூழல்ல அதாவது 5% ரூபாயோட மதிப்பு குறைந்தால் 5% தங்கத்தினுடைய விலை அதிகரிக்கிறது .
மேலும், ஒரு பொருளாதார சமநிலையற்ற தன்மையின் காரணமாக, நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் ஒரு பாதுகாப்பான முதலீட்டில் தங்களுடைய சொத்துக்களை வாங்க விரும்புறாங்க. எனவே, பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதன் காரணமாக இந்த தங்கத்துடைய விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுது.
அதேபோல, சீனா போன்ற நாடுகள் இதற்கு முன்னாடி பெரிய அளவில் தங்கத்தில் முதலீடு செய்யவில்லை. தற்போது அந்த நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இப்ப இருக்கக்கூடிய இந்த சூழல் விலை ஏற்றத்திற்கான சூழல் அப்படிங்கறது, தொடர்ந்து நீடிப்பதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பா, முதலீட்டாளர்கள் இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை, அதேபோல் தங்கம் இப்படி எடுத்துக்கொண்டால், தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு சிறந்த முதலீடு என்று அவர்கள் முன்வைக்கக்கூடிய கருத்தாக உள்ளது. மேலும், தற்போது பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக நம்ம பங்குச் சந்தையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சமீப காலமாக நம்மளால் பார்க்க முடியுது.
அந்த நிச்சயமற்ற தன்மை இருக்கும் நிலையில இந்த தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு சிறந்தது என்று பொருளாதார நிபுணர்களுடைய கணிப்பு இருக்கிறது. தங்கத்துடைய விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், ஒரு கிராம் தங்கத்தினுடைய விலை ₹10000 வரைக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடையக்கூடிய சூழல் இருப்பதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.